மேலும் அறிய

CM Mk Stalin: ”புதுமைப் பெண் திட்டத்தால் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன?” - முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

’புதுமைப் பெண்’ இரண்டாம் கட்ட திட்டத்தை பட்டாபிராம் இந்து கல்லூரியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

’புதுமைப் பெண்’ இரண்டாம் கட்ட திட்டத்தை பட்டாபிராம் இந்து கல்லூரியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகலில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவி தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் மேலும், 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “இரண்டாம் கட்டமாக இந்தத் திட்டத்தை நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இந்த பட்டாபிராம் இந்து கல்லூரிக்கு நான் வந்திருக்கிறேன். பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்ணுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கின்ற காரணத்தினால், அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவருடைய எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறனும் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தைத் திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். சொந்தக் காலில் பெண்கள் நிற்பார்கள் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வியை தொடர் முடியாமல் கைவிட்ட 10 ஆயிரத்து 146 மாணவிகள் இந்தத் திட்டத்தின் வாயிலாக தங்களது உயர்கல்வியை பயிலத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவே இந்தத் திட்டத்தின் வரவேற்பிற்கும், வெற்றிக்கும் சான்றாக அமைந்திருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கக்கூடிய மொத்த மாணவிகள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 16 பேர்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 48 ஆயிரத்து 660 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 50 ஆயிரத்து 550 பேர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 44 ஆயிரத்து 880 பேர். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 1,900 பேர் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

மேலும் பல உதவிகளைச் செய்து கொடுக்க நாம் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். ஆகவே, உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, நன்றாகப் படியுங்கள் - படியுங்கள் - படியுங்கள் என்பது மட்டும்தான். உயர்கல்வியை படியுங்கள். ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். தகுதியான வேலைகளில் சேருங்கள். பெண்ணுக்கு திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் - பொருளாதார சுதந்திரமும் முக்கியம். தகுதியுள்ள வேலைவாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கும் காலத்தில் திறமையோடு செயல்படக்கூடிய எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளே இருந்து விடுகிறார்கள்.

கல்வி அறிவும், கலைத்திறனும், தனித்திறமைகளும்தான் யாராலும் அழிக்க முடியாத சொத்துகள்! அதனைப் பயன்படுத்தி வாழ்நாள் முழுக்க நீங்கள் அனைவரும் உங்களுக்கென ஒரு தனித்த ஓர் அடையாளத்துடன் திகழ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

படிக்கும் காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். கல்லூரிக் காலத்தை படிப்புக்கும், உயர்வுக்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை இந்த நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களுடைய சகோதரனாக, உங்களுடைய உடன்பிறப்புகளில் ஒருவனாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் தந்தையாக இருந்து நான் உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களை வளர்த்தெடுக்கவே இந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம்.

நடத்தி இதை இந்த அரசே உங்களின் தோழனாக கருதி, இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை செய்வோம், என்னென்ன உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தோம். அவைகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவிற்கு நிறைவேற்றப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஒன்றிரண்டு திட்டங்கள் இன்னும் நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. எவ்வளவுதான் நிதி நெருக்கடி நிலை இருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து, அதையெல்லாம் ஓரளவிற்கு சரிசெய்து, முடிந்த வரைக்கும். நாம் அறிவித்த திட்டங்களை இதுவரைக்கும் பெருமையோடு சொல்கிறேன், 85 சதவீதத்திற்கு மேல் உறுதிமொழிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் ஒரு 10, 15 சதவீதம் மிச்சம் இருக்கிறது அதை நான் மறுக்கவில்லை. அதையும் நான் உறுதியோடு சொல்கிறேன்.

நிச்சயமாக, உறுதியாக அதையும் வரக்கூடிய காலக்கட்டத்தில் முழுமையாக நிறைவேற்றக்கூடிய ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. அறிவித்த திட்டங்கள் மட்டுமல்ல, அறிவிக்காத திட்டங்களும் இன்றைக்கு நிறைவேற்றப்படுகிறது. அதுதான் இந்த புதுமைப் பெண் திட்டம்.

தேர்தல் அறிக்கையில் புதுமைப் பெண் திட்டம் அறிவிக்கவில்லை. அதை இன்றைக்கு நிறைவேற்றுகிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை, சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஓர் ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, அப்படிப்பட்ட ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள இந்தக் கல்வியை நீங்கள் நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடையக்கூடிய நம்முடைய மாணவியர்களை நான் உங்கள் அனைவரின் சார்பில், வாழ்த்தி, விடைபெறுகிறேன்.” என உரையாற்றியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
TVK slams seeman :
TVK slams seeman : "திரள்நிதி, கட்டுத்தொகை, உளறல்.." சீமானை கிழித்து தொங்கவிட்ட தவெக
IND vs ENG 3rd ODI: சுப்மன்கில் அபார சதம்! ஸ்ரேயஸ், கோலி சரவெடி! இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
IND vs ENG 3rd ODI: சுப்மன்கில் அபார சதம்! ஸ்ரேயஸ், கோலி சரவெடி! இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
Trump on GAZA Again: விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
TVK slams seeman :
TVK slams seeman : "திரள்நிதி, கட்டுத்தொகை, உளறல்.." சீமானை கிழித்து தொங்கவிட்ட தவெக
IND vs ENG 3rd ODI: சுப்மன்கில் அபார சதம்! ஸ்ரேயஸ், கோலி சரவெடி! இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
IND vs ENG 3rd ODI: சுப்மன்கில் அபார சதம்! ஸ்ரேயஸ், கோலி சரவெடி! இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
Trump on GAZA Again: விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
CV Shanmugam Slams EC: அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
Valentines Day Movie Release : காதலர் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும்  11 படங்கள்
Valentines Day Movie Release : காதலர் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும் 11 படங்கள்
Embed widget