மேலும் அறிய

Chennai Book Fair 2023: புத்தகப் பிரியர்களுக்கு காத்திருக்கும் விருந்து... சென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்! ஸ்பெஷல் என்ன?

சென்னை புத்தக கண்காட்சிக்காக கடந்தாண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தக வாசிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த  46வது புத்தக கண்காட்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

சென்னை புத்தக கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில்  ஒவ்வொரு ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 46வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பங்கேற்கவுள்ளார். 

இந்நிகழ்வில் தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு  முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் தலா ரூ.1 லட்சம் பணத்தையும் முதலமைச்சர் வழங்குகிறார்.  மேலும் 9 பேருக்கு பபாசி சார்பில் விருதுகளும் வழங்கப்பட உள்ளது. புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

என்ன சிறப்புகள்? 

சென்னை புத்தக கண்காட்சிக்காக கடந்தாண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் முதன்முறையாக திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்திற்கு அரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கும்  தமிழக அரசு சார்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி   ஜனவரி 16,17,18 ஆகிய 3 நாட்கள்  நடக்கவுள்ளது. புத்தக கண்காட்சிக்காக கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள்,தமிழர்கள்  வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் வைரவன் மற்றும் செயலாளர் முருகன்  தெரிவித்துள்ளனர். 

சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதன் காரணமாக இந்தாண்டு தொல்லியல் அரங்குகள் அமைக்கப்படவில்லை. அதேபோல் 20 முதல் 40 புத்தகங்கள் வைத்திருப்பவர்களுக்கு மினி ராக் சிஸ்டம் முறை அறிமுகமாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதியாக நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல்  ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை சேவையும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

மற்றவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10ம் வசூலிக்கப்படும் நிலையில், பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு புத்தக காட்சியை 30 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில் இந்தாண்டு கூடுதலாக 20 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புத்தக வாசிப்பாளர்களை சந்திக்க எழுத்தாளர்களும் வருகை தருவார்கள். கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்னை புத்தக கண்காட்சி ஒரு வரப்பிரசாதம் தான்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
Vijayakanth:
Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?
Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?
Embed widget