தமிழகத்தில் போதைப்பொருள் நுழைவதை தடுக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#LIVE: போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் தலைமையுரை https://t.co/O1S53m006h
— M.K.Stalin (@mkstalin) August 10, 2022
அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “ இந்த கூட்டத்தை போதைப்பொருள் தடுப்புக்காக கூட்டியிருக்கிறோம் என்று சொன்னால், இது வருங்காலத்தில் மாபெரும் பிரச்சனையாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான். இந்த அரங்கத்தில் இருக்கும் தமிழகத்தில் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க வேண்டும். அதற்கான உறுதியை நாம் எடுத்தாக வேண்டும். போதைப்பொருட்கள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை தடுக்க வேண்டும். அதை பரவுவதை தடுத்தாக வேண்டும். விற்பனையாவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும்.
பயன்படுத்துபவர்களை அதில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும். புதிதாக ஒருத்தர் கூட இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகி விடக்கூடாது. முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்து விடவேண்டும். இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டதையும் ஒப்படைத்துள்ளேன். நீங்கள்தான் அந்த உறுதியை எனக்கு வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/HqnJIZQWU1
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 10, 2022
தொடர்ந்து பேசிய அவர், " குஜராத்தைவிட, மஹாராஷ்டிராவை விட போதைப்பொருள் நடமாட்டம் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. ஒரு சிறு துளிக்கூட இனி தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. ஒருவர் அதற்கு அடிமையானாலும் அது நமக்கு அவமானம்தான். எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு, போதைப்பொருள் விஷயத்தில் விலகியே நிற்க வேண்டும். போதைப்பொருள் என்றாலே உடலுக்கு கேடு விளைவிக்கும். போதைப்பொருள் பயன்படுத்த ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது. அந்த காரணத்திற்கெல்லாம் அடிமையாகி விடக்கூடாது. இது அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாத காரணம்தான். போதையின் பாதையில் செல்பவர்கள் எல்லாம் கோழைகள். போதைப்பொருள் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு. போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பது தமிழ்நாட்டின் குறிக்கோள்” என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்