சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு
சென்னை உட்பட பல்வேறு இடங்களில்ல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மீனம்பாக்கம், சாந்தோம், மெரினா உள்ளிட்ட பல்வேறு மாலை 6 மணியில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. போரூர், பழவந்தாங்கல், வளசரவாக்கத்திலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மீனம்பாக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கிண்டி, மயிலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வயப்பு என வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2023-09-29-19:28:02 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கும்மிடிப்பூண்டி,பூவிருந்தவல்லி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/XeicdLNfaH
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 29, 2023