Special Bus: சென்னைக்கு திரும்ப வர கூடுதலாக 1, 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முன் பதிவு செய்வது எப்படி?
சென்னைக்கு திரும்ப வர கூடுதலாக இன்றும் நாளையும் 1, 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னைக்கு திரும்ப வர கூடுதலாக இன்றும் நாளையும் 1, 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தி மற்றும் நவராத்திரி பண்டிகையின் முக்கியமான நாட்களான ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகைகளால், சென்னையில் இருந்து பல்வேறு மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றன. இதனால், சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. மேலும் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.
கூடுதல் சிறப்பு பேருந்துகள்:
இந்நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற நபர்கள், சென்னை திரும்புவதற்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள், இன்றும் நாளையும் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1, 150 பேருந்துகள் என மொத்தமாக 3, 250 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி முன்பதிவு செய்வது:
www.tnstc.in என்ற இணையதளத்தில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பஸ் எண்ணிக்கை
அதிக டிக்கெட் கட்டணத்தை பொருட்படுத்தாமல், பலர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பஸ்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பண்டிகை நேரத்தில் பேருந்துகளுக்கான தேவை மிக அதிகமாக இருந்த நிலையில் பொதுவாக, சென்னையில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு 13 மணி நேரம் ஆகும், ஆனால் SETC பேருந்துகளில் 17 முதல் 18 மணி நேரம் ஆகிறது என்று சென்னையில் பணிபுரியும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தனியார் பேருந்துகள் தற்போது பேருந்து கட்டணத்தை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைத்துள்ளனர் என்றார்.
கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ளவர்கள் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்ததாக அவர் கூறினார். அதிகப்படியான டிக்கெட் கட்டணம் குறித்து யாராவது புகார் அளித்தால், அவர்களின் டிக்கெட் தொகை அவர்களுக்கே திருப்பித் தரப்படும் என்றும் அவர் கூறி இருந்தார். ஆம்னி பஸ்களின் பயணம் குறித்து தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் பேசுகையில், "காந்தி ஜெயந்தி, சரஸ்வதி, ஆயுத பூஜையை தொடர் விடுமுறையை முன்னிட்டு, இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து இயக்கப்பட்ட, 1,910 ஆம்னி பஸ்களில், 69 ஆயிரத்து, 120 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்து இயக்கப்பட்ட, 1,030 ஆம்னி பஸ்களில், 37 ஆயிரத்து, 80 பேர் என மொத்தம், 1 லட்சத்து, 6 ஆயிரத்து, 200 பேர் சென்றுள்ளனர்.
Also Read: Nobel Prize 2022 Chemistry: 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வேதியியலுக்கான நோபல் பரிசு