Chennai Rain Update: சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
Tamil Nadu Rain News Updates: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.
LIVE
Background
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே 23 அடி உயர்ந்தால் தண்ணீரை திறக்கலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Chennai Rain Update: சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.
Chennai Rain Update: சென்னை கனமழை பாதிப்பு - முதல்வருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு
சென்னை கனமழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
Chennai Rain Update: சென்னையில் மீண்டும் கனமழை ஆரம்பம்
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கே.கே.நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Chennai Rain Update: சென்னை முதல் கடலூர் வரை கனமழைக்கு வாய்ப்பு
இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை சென்னை முதல் கடலூர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
Tonight convergence from Chennai to Cuddalore belt is seen. So there is chance of heavy rains Chennai to Cuddalore from night to monday morning
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 7, 2021
---
A simple understanding of the systems in our basins.
Detailed post and Rainfall data after 8.30 am - https://t.co/J2EwpRExdV pic.twitter.com/4BpUh3YLmT
Chennai Rain Update: செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு 2000 கனஅடியாக உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்படும் நீரின் அளவு 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து ஏற்கெனவே 1000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.