மேலும் அறிய

"ராஜேந்திர பிரசாத்துக்கு கிளார்க் வேலை பார்த்தவர் அம்பேத்கர்" - விஷ்வ இந்து பரிஷத் இயக்க முன்னாள் தலைவர் மணியன் கைது

இந்துத்துவ கருத்துகளை பரப்பி வரும் சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியனினின் பேச்சு, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

வெறுப்பை தூண்டும் விதமான பேச்சுக்களும் அவதூறு பேச்சுக்களும் சமூகத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகம், தலித் மக்களுக்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சும் அவதூறு பேச்சும், சமூகத்தின் அமைதியை கெடுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

வெறுப்பு பேச்சையும் அவதூறு பேச்சையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை தூண்டும் விதமான அவதூறு பேச்சை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையும் படிக்க: Morning Headlines: போபாலில் I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்; கர்நாடகாவின் அதிரடி முடிவு - முக்கிய செய்திகள் இதோ!

அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய இந்துத்தவ சொற்பொழிவாளர்:

இருப்பினும், வெறுப்பை தூண்டும் விதமாக அவதூறு பேசுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், திருவள்ளுவரை பற்றியும் அம்பேத்கரை பற்றியும் இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரும் இந்துத்துவா சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

இந்துத்துவ கருத்துகளை பரப்பி வரும் சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியனினின் பேச்சு, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தலித் மக்கள், அம்பேத்கர், திருவள்ளூவர் ஆகியோரை பற்றி அவர் தெரிவித்த மோசமான கருத்து சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

என்ன பேசினார்?

அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் ராஜேந்திர பிரசாத் என்றும் அவருக்காக கிளார்க் வேலை பார்த்தவர் அம்பேத்கர் என்றும் அவர் கூறியிருந்தார். திருவள்ளுவர் என்ற ஆளே கிடையாது, அவர் ஒரு கற்பனை என்றும் ஆர்.பி.வி.எஸ். மணியன் கூறியிருந்தார். இப்பேச்சுக்காக ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டது. 

இது தொடர்பாக போலீசாரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அம்பேத்கரை இழிவாகப் பேசியதற்காக சென்னையில் உள்ள மாம்பலம் வீட்டில் இன்று காலை ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153,153(a), எஸ்சி/எஸ்டி சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, அவருக்கு 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளார். 

இதையும் படிக்க: 7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? இன்றைய நிகழ்வுகள்.. அனைத்தையும் அறிய காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget