மேலும் அறிய

Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

தவெக எம்.எல்.ஏ. பல்லவியுடனான மோதலுக்குப் பிறகு சென்னை மேயர் பிரியா, அமைச்சர் ராஜ்மோகனுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஆனால் இந்நிகழ்ச்சியில் அவர் பரிதவிப்புடன் இருந்ததாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தவெக அரசை தவிர்க்கும் மேயர் பிரியா

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால் முதலமைச்சரை சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஒரு மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. திமுக தரப்பில் வெற்றி பெற்று மேயரான பிரியா, தான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் பொருட்டு இதனை செய்கிறார். ஆனால் மக்கள் பணி என வந்துவிட்டால் விருப்பு, வெறுப்பை எல்லாம் ஓரம் கட்ட வேண்டும் என பலரும் அட்வைஸ் வழங்கி வருகின்றனர். 

எம்.எல்.ஏ. பல்லவியுடன் மோதல் 

இதனிடையே கடந்த ஜூன் 4ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் அரசு பள்ளி ஒன்றில் விழா நடைபெற்றது. அதில் அந்த தொகுதி தவெக எம்.எல்.ஏ., பல்லவி, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தவெக எம்.எல்.ஏ. பல்லவியை அவமரியாதை செய்தார். ரிப்பன் வெட்டுவது தொடங்கி குத்துவிளக்கு ஏற்றுவது வரை பல்லவிக்கு பிரியா தடைகளை ஏற்படுத்தினார். இதற்கு அதேநாளில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பல்லவி பதிலடி கொடுத்தார். 

ஆனால் தான் புரோட்டாகால்படி தான் நடந்துக் கொண்டேன் என விளக்கம் கொடுத்தாலும், ஒரு நிகழ்ச்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியான எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ.,க்குத் தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என பலரும் பிரியாவை விமர்சித்தனர். சமூக வலைத்தளத்தில் பிரியாவை, “புரோட்டோகால் பிரியா” என இணையவாசிகள் வசைபாடினர். இதனைத் தொடர்ந்து கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பிரியா தவெகவை சரமாரியாக விமர்சிக்க தொடங்கியுள்ளார். 

ராஜ்மோகன் அழைப்பும்.. பிரியா எஸ்கேப்பும்

இதனிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் 100 சதவிகிதம் பள்ளிகளில் தேர்ச்சியை உற்ய்தி செய்த ஆசிரியர்களுக்கும் வளர்ச்சி நிதி வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு மேயர் பிரியா வர, “அம்மா வர்றீங்களா” என பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைத்தார். அதற்கு பிரியா, “இல்லை.. இல்லை.. நீங்க பேசுங்க. நான் வருகிறேன்” என சொல்லி விட்டு  சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தவெக அரசை விமர்சித்து விட்டு இன்னும் 6 மாதம் எப்படி பதவியில் இருக்கப்போகிறோம் என  ஒருவித பதட்டத்துடன் மேயர் பிரியா இருக்கிறார் என்பது அவரது ரியாக்‌ஷனைப் பார்த்தால் புரியும் என பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Coastal Cruise Tourism: கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் அறிவிப்பு!
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget