Living Together | 'லிவிங் டு கெதர் வாழ்க்கையா?’ : வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலைச்செல்வி என்னும் பெண் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் (லிவிங் டு கெதர்) குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலைச்செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
#JUSTIN | 'லிவிங் டு கெதர் வாழ்க்கையா? வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்https://t.co/wupaoCQKa2 | #MadrasHighCourt | #Chennai pic.twitter.com/warXKESHLb
— ABP Nadu (@abpnadu) November 5, 2021
லிவிங் டு கெதர் வாழ்க்கை தொடர்பான வழக்கு
லிவ் இன் உறவுகள் தனிநபர் சார்ந்தது. அதை இரு தனிநபர்களின் சுதந்திரம் சார்ந்தே பார்க்க வேண்டும். அதில் சமூகப் பார்வையை திணிக்கக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ப்ரீதின்கர் திவாகர், அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இருவெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரு ஜோடிகள் லிவ் இன் உறவில் இருக்க பெண்ணின் வீட்டார் இடையூறு செய்வதாக நீதிமன்றத்தை நாடினர்.
முன்னதாக இரு தரப்பினரும் காவல்துறையை நாடியுள்ளனர். காவல்துறை சார்பில் எவ்வித உதவியும் செய்யப்படாத நிலையில் அந்த ஜோடி நீதிமன்றத்தை நாடின.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "அரசியல் சாசன சட்டப் பிரிவு 21 தனிநபர் சுதந்திரம் வழங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் லிவ் இன் உறவுகள் என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. அத்தகைய உறவை தனிநபரைச் சார்ந்து தனிநபரின் உரிமைக்கு உட்படுத்தியே பார்க்க வேண்டுமே தவிர அதனை சமூகத்தின் பார்வையில் பார்க்கக் கூடாது. சமூகம் கலாச்சாரக் காவல் பார்வையில் இவ்விவகாரத்தை அணுகக் கூடாது" என்று தெரிவித்தனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்