மேலும் அறிய

AIADMK Meeting: முடிவுக்கு வந்த அதிமுக பொதுக்குழு குழப்பம்! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக பொதுக்குழுக் கூட்டம்  நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். இதனை அடுத்து சென்னை வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஓபிஎஸ் தரப்பு வாதம்

இந்த விசாரணையில், ஓபிஎஸ் தரப்பு “பொதுக்குழு நடத்தலாம். ஆனால் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரக்கூடாது. பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமையை மாற்றும் திருத்தங்களை செய்யக்கூடாது.” என்று வாதிட்டது. 

AIADMK Meeting: முடிவுக்கு வந்த அதிமுக பொதுக்குழு குழப்பம்! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் 

மேலும், “ கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அந்தப்பதவிக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 23 வரைவு தீமானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது.

23 வரைவு தீர்மானங்களின் நகல் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு புதிதாக தீர்மானங்களை சேர்க்கக்கூடாது. அதிமுக விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் எனவும் ஓ.பி.எஸ். சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 

எடப்பாடி தரப்பு வாதம்: 

2017ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன என்று ஈ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. 

எடப்பாடி தரப்பு வாதத்தில், “ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொது குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், நடக்காது என உத்தரவாதமாக சொல்ல முடியாது. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும், அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்கை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது.

AIADMK Meeting: முடிவுக்கு வந்த அதிமுக பொதுக்குழு குழப்பம்! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

நாளைய பொதுக்குழுவில் திருத்தம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம்.பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம். அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும். எந்த விதியையும், நீக்கவோ, சேர்க்கவோ 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. ஆகையால் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கூடாது”  எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து வாதிட்ட ஓபிஎஸ், “ எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும். பொதுக்குழுவில் முடிவுகளை காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். பொதுக்குழுவில் செயல் திட்டத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவில் சிலர் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எடுக்க கூடாது” என்று  வாதிடப்பட்டது. 

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடந்த இந்த விசாரணையின் போது, நீதிபதி “ பொதுக்குழுவில்  திடீரென யாராவது எந்த விவகாரத்தையாவது  எழுப்ப வேண்டுமென்றால்  என்ன செய்வது என்று ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பினார். கடந்த 3 மணி நேரமாக காரசாரமாக நடந்த விவாதத்தின்படி தற்போது பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Update: புயல் உருவாகும், ஆனால் புயலாக கரையை கடக்காது.! ஏன்? எப்போது? எங்கு கனமழை? - வானிலை புது அப்டேட்.!
Fengal Cyclone Update: புயல் உருவாகும், ஆனால் புயலாக கரையை கடக்காது.! ஏன்? எப்போது? எங்கு கனமழை? - வானிலை புது அப்டேட்.!
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Update: புயல் உருவாகும், ஆனால் புயலாக கரையை கடக்காது.! ஏன்? எப்போது? எங்கு கனமழை? - வானிலை புது அப்டேட்.!
Fengal Cyclone Update: புயல் உருவாகும், ஆனால் புயலாக கரையை கடக்காது.! ஏன்? எப்போது? எங்கு கனமழை? - வானிலை புது அப்டேட்.!
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Annapoorani Arasu Amma: ”அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்” தெய்வீக திருக்கல்யாணம் என பக்தர்கள் பரவசம்..!
Annapoorani Arasu Amma: ”அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்” தெய்வீக திருக்கல்யாணம் என பக்தர்கள் பரவசம்..!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e & XEV 9e கார் - அசத்தலான் ஸ்டைல், ரஹ்மான் டச் - டாப் 6 அம்சங்கள் இதோ..!
Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e & XEV 9e கார் - அசத்தலான் ஸ்டைல், ரஹ்மான் டச் - டாப் 6 அம்சங்கள் இதோ..!
Embed widget