Chennai ECR Name change: சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலையானது முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாவில் அறிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை 1946 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துருக்கிறது. மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானது நெடுஞ்சாலைத்துறை. தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கியப்பங்கு நெடுஞ்சாலைத்துறைக்கு உண்டு.1954 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையத்தை உலகத்தரத்தில் மாற்ற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. நெடுஞ்சாலைத்துறைக்கு 1998 ஆம் ஆண்டு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதை உருவாக்கியவர் கருணாநிதி.
View this post on Instagram
1973 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அண்ணா மேம்பாலத்தை கட்டினார். அந்த நாளில் 69 லட்சம் செலவில் அந்தப்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலம் தற்போதும் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2200 கிமீ தூரமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழிச்சாலைகளாகவும், 6700 கிமீ தூரமுள்ள சாலைகளை 2 வழி சாலைகளாகவும் மேம்படுத்த இருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறையில் 1281 தரைப்பாலங்களை 2401 கோடி செலவில் உயர்மட்ட பாலங்களாக கட்ட திட்டமிட்டு இருக்கிறோம். 2026 ற்குள் தரைப்பாலங்களே இல்லாத நாடாக தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்