Breaking: சென்னை விமானநிலையத்தில் 100 கோடி மதிப்பிலான போதை பொருள் சிக்கியது- அதிர்ச்சியில் அதிகாரிகள்
சென்னை விமான நிலைய வரலாற்றில் அதிகளவாக ஒரே நாளில் 100 கோடி மதிப்பலான போதை பொருள் சிக்கியுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நேரத்தில் ஒரு பயணியிடம் ர 9.590 கிலோ கொக்கைன், ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்.
எத்தியியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த பயணியை சுங்கத்துறை கைது செய்து, காலனிகள், உள்ளாடை மற்றும் கோட்டில் மறைத்து வைத்திருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். எத்தியோப்பியா நாட்டிலிருந்து பெரும் அளவு போதை பொருள் சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், ஆப்பிரிக்கா நாடான எத்தியொப்பியா நாட்டின் அடீஸ் அபாபா நகரிலிருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.
அதில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் அவர்களிடம் இந்த எந்தவிதமான போதைப்பொருளும் கைப்பற்ற படவில்லை. இந்த நிலையில் இந்தியரான இக்பால் பாஷா (38) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் எதற்காக ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியன் சென்று வருகிறார்? என்று கேட்டனா். அதற்கு அந்த பயணியால், சரியான பதில் அளிக்க முடியவில்லை.
இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர். அப்போது அவர் அணிந்திருந்த காலணிகள் மற்றும் உள்ளாடைகள், அவர் அணிந்திருந்த கோர்ட்டுக்குள் ரகசியப்பை அறைகள் என்று பல்வேறு இடங்களில் மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 100 கோடி.
இது சுங்க அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியது. சென்னை விமான நிலையம் 1932 ஆம் ஆண்டு உருவாகிய பின்பு, இதுவரை இந்த அளவு ஒரே பயனிடம் ஒரே நேரத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்ததே கிடையாது. இதுவே முதல் முறை. இதை அடுத்து அந்தப் பயணியை கைது செய்த சுங்கத்துறையினா்,ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருளையும் பறிமுதல் செய்து, அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இந்த ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்து, எங்கெங்கெல்லாம் கடத்த இருந்தாா்.இவர் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்துகிறது. சென்னை விமான நிலையத்தில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக நேற்று எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.11.75 கோடி மதிப்புடைய 1.218 கிலோ கோக்கையின் போதைப்பொருள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பை,உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்த சா்வதேச போதை கடத்தும் கும்பலை சோ்ந்த, வென்சிலா நாட்டு பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்