Chennai Air Show 2024: சென்னையில் விமான சாகசங்கள் பார்க்க போறீங்களா? இதெல்லாம் கட்டாயம்! இதுக்கெல்லாம் No!
நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். தேவைப்பட்டால் பழச்சாறு, எலுமிச்சை நீர், எலக்ட்ரோலைட் உள்ளிட்ட திரவங்களையும் சாக்லேட்டுகள் உள்ளிட்ட இனிப்புகளையும் எடுத்துச் செல்லலாம்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை, மெரினாவில் காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை கண்கவர் விமான சாகசங்கள் நடைபெற உள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இலவசமாகப் பார்க்க முடியும் என்பதாலும் மெரினா கடற்ரையில் சுமார் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிடோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு வார காலமாகவே, சென்னை வான்பரப்பில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சிக்குச் செல்லும் பெற்றோர்கள் சில பொருட்களைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- விமான சாகசம் விவேகானந்தர் இல்லம் பகுதியை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. அதனால் அந்த இடத்துக்கு சென்றால் நன்றாக, தெளிவாகக் காண முடியும். எனவே அதற்கேற்ற வகையில் திட்டமிடுங்கள். கலங்கரை விளக்கத்தில் இருந்து பிரசிடென்சி கல்லூரி வரை காட்சிகளை நேரடியாக சிறப்பாகக் காணலாம்.
தண்ணீர் பாட்டில்கள் கட்டாயம்
- கண்டிப்பாக தண்ணீர் அதிக அளவில் எடுத்துச் செல்லுங்கள். வானிலை மிகவும் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அதேபோல வெயில் மற்றும் எதிர்பாராத மழையில் இருந்து உங்களைப் பாதுகாக்க, குடையை மறக்காதீர்கள்.
தொப்பி, கூலர்ஸ்
- குழந்தைகளும் பெரியவர்களும் நேரடி சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க தலையில் தொப்பி அணிந்துகொள்ளலாம்.
- அதேபோல சன் கிளாஸ்கள் இருந்தாலும் கண்களில் அணிந்துகொள்ளலாம். வானை நோக்கும்போது கண்கள் கூசுவதை இது தவிர்க்கும்.
- நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். தேவைப்பட்டால் பழச்சாறு, எலுமிச்சை நீர், எலக்ட்ரோலைட் உள்ளிட்ட திரவங்களையும் சாக்லேட்டுகள் உள்ளிட்ட இனிப்புகளையும் எடுத்துச் செல்லலாம்.
- உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். களைகட்டும் கண்கவர் சாகசங்களை அவர்கள் நேரில் கண்டு மகிழ்வார்கள். அதேநேரம் வெயில், பாதுகாப்பு அம்சங்கள், நீண்ட நேரக் காத்திருப்பு ஆகியவற்றை நினைவில் கொள்ளுங்கள்.
வாகனங்களுக்கு அனுமதியில்லை
- சாகசம் நடைபெறும் கடற்கரைப் பகுதிக்கு அருகில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. எனவே முன்கூட்டியே நிகழ்விடத்தை அடைந்து, கடற்கரைக்கு நடக்க திட்டமிடுங்கள்.
- வெயிலால் மணல் சூடாக இருக்கும் என்பதால், அதற்கேற்ற காலணிகள் அணிந்து செல்லலாம்.
என்னென்ன நிகழ்ச்சிகள்?
இந்த சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன. குறிப்பாக, கோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்த உள்ளன.
போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. ஸ்கைடிவிங் திறன்
- ஆகாஷ் கங்கா.
- சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு
- க்ளோஸ் ஃபார்மேஷன் லையிங்
- சாரங் ஹெலிகாப்டர் காட்சி குழு
- ஸ்டன்னிங் ஏரியல்
உள்ளிட்ட சாகசங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.