Chandramouli reddy : சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!
சந்திரமௌலி ரெட்டி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி ரெட்டி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். சந்திரமௌலி ரெட்டி கடந்த 18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சில நாட்களில் திருமணம்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட சந்திரமௌலி ரெட்டி (28) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 26-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்ததும், இதனை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாகவும் இருந்தது.
இந்நிலையில், சந்திரமவுலி ரெட்டிக்கு கடந்த 18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கவலைக்கிடம்
இதுகுறித்து நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அவருக்கு சி.பி.ஆர். பரிசோதனைகள் முடிந்த நிலையில், அவர் கேத் லேப் பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய தமனியில் 'ஸ்டண்ட்' கருவி பொருத்தப்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று மரணம்
எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8.20 மணியளவில் அவர் உயிரிழந்தார் என காவேரி மருத்துவனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே சந்திரமௌலி ரெட்டி தனது கண்களை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்ததால், அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
சந்திரமௌலி ரெட்டிக்கும் சேகர் ரெட்டி மகளுக்கும் சில நாட்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 28 வயதான சந்திரமௌலி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் மணமகன் உயிரிழந்தது இருவீட்டாருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க
Vairamuthu: தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த பேத்தி; விடைத்தாளை பகிர்ந்து பெருமிதம் கொண்ட வைரமுத்து!