மேலும் அறிய

Rain Alert :தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இரண்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணிநேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: 

"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,   
 
18.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
 
19.08.2023 மற்றும் 20.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
21.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
22.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
அதிகபட்ச வெப்பநிலை : 
 
18.08.2023 மற்றும் 19.08.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;  ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 
 
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
 
தமிழக கடலோரப்பகுதிகள்: 
 
18.08.2023 மற்றும் 19.08.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
வங்கக்கடல் பகுதிகள்:
 
18.08.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள்,  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
18.08.2023 மற்றும் 19.08.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை 
 
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
 
அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை) 7, அடையாறு (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை) தலா 6, DGP அலுவலகம் (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG (சென்னை), மதுரவாயல் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), ராயபுரம் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 5, தாம்பரம் (செங்கல்பட்டு), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமான நிலையம், KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), திருவொற்றியூர் (சென்னை), பெருங்குடி (சென்னை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் ISRO AWS (சென்னை), ACS மருத்துவக் கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 4, திருப்போரூர் (செங்கல்பட்டு), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கொரட்டூர் (திருவள்ளூர்), சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), மணலி (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), MGR நகர் (சென்னை) தலா 3, கொளத்தூர் (சென்னை), மாதவரம் (சென்னை), TVK நகர் (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தொண்டையார்பேட்டை (சென்னை), பெரம்பூர் (சென்னை), திருவள்ளூர், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), உத்தண்டை (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), MRC நகர் (சென்னை), NIOT பள்ளிக்கரணை (சென்னை) தலா 2, செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), கத்திவாக்கம் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), திருர் KVK AWS (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) , அம்பத்தூர் (திருவள்ளூர்), வானகரம் (சென்னை), மலர் காலனி (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), பெருங்குடி (சென்னை), புழல் (திருவள்ளூர்) தலா 1.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.