மேலும் அறிய

TNEB: மின்வாரியத்தின் அடுத்த அதிரடி...! எல்லா வீடுகளுக்கும் வரப்போகுது "ஸ்மார்ட் மீட்டர்"

தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவது தொடர்பாக மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவது தொடர்பாக மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 3.25 கோடி வீட்டு மின்இணைப்புகளும், 22.87 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 9.75 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து உள்ள மின் இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற இருக்கிறது. 

ஸ்மார்ட் மீட்டர்:

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில்,” மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ்,நாட்டில் உள்ள 13 மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.10,790 கோடி ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.8,600 கோடி வழங்கப்படும்.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்களை பெறுவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய வரும் 15ம் தேதிக்குள் டெண்டர் விடப்படும். அதேபோல், வருகின்ற 2025-26-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள தி.நகரில் 1.09லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டர்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ப்ரீபெய்டு திட்டமாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இலவச மின் இணைப்புகளான விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட்மீட்டர் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஸ்மார்ட் மீட்டர்: 

முன்னதாக, ஆளில்லாத மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இரு மாதங்களுக்கு ஒருமுறை, ஊழியர்கள் சென்று மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எசுத்து வருகின்றனர். இதன் காரணமாக, அதிகளவு காலதாமதம் ஆவதால், குறைந்த அளவு மின் பயன்பாட்டு இருப்பதாக கணக்கு காண்பித்து முறைக்கேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. 

இந்த பிரச்சனை நாடு முழுவதும் உள்ளதால், மின் பயன்பாட்டை ஆளின்றி கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. 

ஸ்மார்ட் மீட்டர் பயன்கள்:

குறிப்பிட்ட தேதி வந்ததும் ஸ்மார்ட் மீட்டர் தானாகவே மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, மின் கட்டண விவரம், நுகர்வோரின் மொபைல் போன் எண்ணிற்கு மெசேஜை சென்று விடும். 

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை தி.நகரில் 1.42 லட்சம் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த ஆய்வுகள் முடிந்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Embed widget