மேலும் அறிய

Masala Crop Event: ஜுலை 16-ல் மாபெரும் நறுமணப் பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு கூட்டம்.. அழைப்பு விடுத்த காவேரி கூக்குரல் இயக்கம்!

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு கூட்டம் புதுக்கோட்டையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு வரும் ஜூலை 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக நேற்று (ஜூலை 14) சென்னை பிரஸ் கிளப்பில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி  போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.

Masala Crop Event: ஜுலை 16-ல் மாபெரும் நறுமணப் பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு கூட்டம்.. அழைப்பு விடுத்த காவேரி கூக்குரல் இயக்கம்!

இக்கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டுகிறார்.

மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பல விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.

Masala Crop Event: ஜுலை 16-ல் மாபெரும் நறுமணப் பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு கூட்டம்.. அழைப்பு விடுத்த காவேரி கூக்குரல் இயக்கம்!

ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப்பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.

விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். பயிற்சியில் கலந்து கொள்ள 94425 90079 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்" என கூறினார். 

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாயிகள் வள்ளுவன் மற்றும் திருமலை ஆகியோர் பங்கேற்றனர். கடலூரைச் சேர்ந்த விவசாயி திருமலை அவரது தோட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மிளகு சாகுபடி செய்கிறார். டிம்பர் மரங்கள், தென்னை, கிளைரிசிடியா, பனை மற்றும் முந்திரி மரங்களிலும் மிளகு வளர்த்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் தென்னை மரங்களுக்கிடையே ஜாதிக்காய் நடவுசெய்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டிவருகிறார். இவர் 6 வருடங்களுக்கு முன் ஈஷா நடத்திய மிளகு சாகுபடி பயிற்சியில் கலந்துகொண்டபின் மிளகு நட்டு தற்போது வெற்றிகரமாக மிளகு அறுவடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
மாபெரும் விவசாய கருத்தரங்கை மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் -  சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் - சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் -  சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் - சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Embed widget