Tamilnadu Cabinet: தமிழ்நாட்டில் 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்
முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காட்டர்பில்லர், பெட்ரோனஷ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காட்டர்பில்லர், பெட்ரோனஷ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வருகை மற்றும் மதுரை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள விழாக்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் பழனிவேல் சந்திப்பு ஏன்..?
பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து அவர் விளக்கமளித்தும், ஆடியோ வெளியிட்ட அண்ணாமலை மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
இந்த சூழலில், அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் வீட்டில் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு அரை மணிநேரம் கூட இல்லை என்றாலும், ஆடியோ விவகாரம் தொடர்பாகதான் இந்த சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பு என்றே திமுக வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.