BREAKING: சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!
பிரேக்கிங் செய்திகளை உடனக்கு உடன் வழங்கும் லைவ் பிளாக் பகுதி இது. உடனடி செய்திகளை வரிசை முறையில் இப்பகுதியில் நீங்கள் அறியலாம்.
LIVE
Background
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியில் தெரிவித்துள்ளார்
சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!
சிவசங்கர் பாபா விவகாரத்தில், விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி. தனிப்படை டேராடூனுக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்னும் அவர் இருக்கும் இடத்தை கண்டறியமுடியவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
சிவசங்கர் பாபா விவகாரம் : ஆசிரியர்கள் பாரதி, தீபா மீது போக்சோ வழக்கு..!
சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரியும், பாரதி, தீபா என்ற இரு ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது.
பப்ஜி மதனை பிடிக்க சேலம், பெருங்களத்தூரில் தனிப்படை முகாம்
யூடியூப் பப்ஜி மூலம் தொடர்ந்து ஆபாசமாக பேசி, பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான யூடியூப்பர் மதன் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என மதன் சவால்விடுத்திருந்தார். இந்நிலையில் அவர் உறவினர்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ள நிலையில் சேலம், சென்னை பெருங்களத்தூர் பகுதியில் தனிப்படையினர் முகாமிட்டு, மதனுக்கு தற்போது வலை வீசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‛எதிர்கட்சியா இருக்கும் போது நீக்கலாமா...’ வெளியானது சசிகலாவின் 42வது ஆடியோ!
சசிகலா பேசும் 42வது ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், புகழேந்தியை நீக்கியது ஆச்சரியமாக இருப்பதாக சசிகலா பேசியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா பேசும் அந்த ஆடியோவில், எதிர்கட்சியாக இருக்கும் போது கட்சியினரை நீக்குவது ஆச்சரியமாக இருப்பதாகவும் சசிகலா பேசியுள்ளார்.
ஜூன் 17 காலை 10:30 மணிக்கு மோடி-ஸ்டாலின் சந்திப்பு
முதல்வராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு கேட்டிருந்த நிலையில், ஜூன் 17 காலை 10:30 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. டில்லி செல்லும் ஸ்டாலின், 17 ம் தேதி பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளிக்கிறார். மறுநாள் சோனியா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.