TN Budget 2025: இதில் ஒன்னும் வியப்பில்லை; வழக்கம்போல்தான்.. பட்ஜெட் குறித்து அண்ணாமலை
Tamilnadu Budget 2025: 2025 – 2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.
பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.#DMKLiquorScam pic.twitter.com/bP8aLFDHg2
— K.Annamalai (@annamalai_k) March 14, 2025
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
— K.Annamalai (@annamalai_k) March 14, 2025
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள்…
முன்னதாக, 2025 – 2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.
நிதிநிலை அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போது, டாஸ்மாக் மதுபானத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்
ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை சரமாரியாக சாடி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்காக பல கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதாவது திமுகவின் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
காலை உணவு திட்டம் புதிய திட்டம் இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான்.
ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
நெல், கரும்புக்கு அறிவித்த ஆதார விலை குறித்த அறிவிப்பு இல்லை.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

