மேலும் அறிய

BJP Cadre: 55 அடி உயரத்துல கொடி கம்பம் எதற்கு? பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நிதிமன்றம்

BJP Cadre: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின்:

சென்னை பனையூரில்  பாஜக கொடிக்கம்பம்  அமைத்தபோது, அனுமதி இல்லை என எதிர்ப்பு எழுந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதாக, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட மனுதாரர்கள் 6 பேருக்கும் நிபந்தை ஜாமின் வழங்கியதோடு, சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கு இழப்பீடாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார். மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில்  மீண்டும் கொடிக்கம்பம்  அமைக்க மாட்டோம் என, பிரமாணபத்திரம் தாக்கல்  செய்யவும் உத்தரவிட்டார். அதோடு, ”55 அடி உயர கொடிகம்பம் வைப்பது முட்டாள் தனமான முடிவு,  காக்கா, குருவி உட்கார தான் அந்த கம்பம் பயன்படும், மக்களின் கண்களுக்கு கொடி தெரியவே தெரியாது” எனவும் நீதிபதி தெரிவித்தார்.  

முதல் மனு தள்ளுபடி:

கொடிக் கம்ம்ம் அகற்றுவதில் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பொக்லைன் வாகன கண்ணாடி உள்ளிட்ட வற்றை பாஜகவினர் அடித்து உடைத்தனர். இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி, கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பாலவினோத் குமார்(34) உள்ளிட்ட பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அனைவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நவம்பர் 30ம் தேதி வரையிலும் அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தான் உயர் நீதிமன்றத்தை நாடி, அமர்பிரசாத் ரெட்டி ஜாமின் பெற்றுள்ளார்.

இரண்டாவது வழக்கு:

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு  இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதில், பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டுமே  இருப்பதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை என அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டினார்.   இதனையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படத்தை அந்த  விளம்பரங்களில் ஒட்டினார். இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அகற்றியதாக அவர் மீது கோட்டூர்புரம் பேலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, பின்பு ஜாமின் பெற்று இருந்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget