BJP Cadre Arrested: தவறாக சித்தரிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம்.. கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகி அதிரடி கைது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங் தலைவராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். முதலமைச்சர் குறித்து தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி ஜெய்குமார் மீது திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி போலீசார் கடலூர் சென்று பாஜக நிர்வாகி ஜெய்குமாரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய்குமார் விசாரணைக்காக திருநெல்வேலி அழைத்து செல்லப்பட்டார்.
முன்னதாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி (56). பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான இவர், பிரதமர் மோடிக்கு ஆதரவு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவேற்றம் செய்து வந்ததாகவும், மேலும் அவர் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்பான கருத்துகளையும் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உமா கார்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், சிங்காநல்லூரை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி உமா கார்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். தந்தையர் தினத்தன்று பெரியார், மணியம்மை குறித்தும் அவதூறான தகவல்களை வெளியிட்டு உள்ளார். அவர் அவதூறு மீம்ஸ்களை வெளியிட்டு வருவதுடன், இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் பேரில், உமா கார்கி மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் படிக்க,
Ponmudi ED Raid: திமுக துணை நிற்கும்.. அமைச்சர் பொன்முடியுடன் ஃபோனில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்