மேலும் அறிய

Michael Battis Award: ராமநாதபுரத்தை சேர்ந்த வனவிலங்கு காப்பாளர் ஜகதீஷ் பக்கனுக்கு யுனெஸ்கோ விருது.. முதலமைச்சர் வாழ்த்து..!

வனவிலங்கு காப்பாளரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பக்கன் , உயிர்க்கோளக காப்பக மேலாண்மைக்கான யுனெஸ்கோவின் மைக்கேல் பாட்டிஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதன்முறையாக, ராமநாதபுரம் வனவிலங்கு காப்பாளரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பக்கன் சுதாகர், உயிர்க்கோளக காப்பக மேலாண்மைக்கான யுனெஸ்கோவின் மைக்கேல் பாட்டிஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 14 ஆம் தேதி பாரிஸில் நடைபெறும் விழாவில் ஜகதீஷ் பக்கன் விருதைப் பெற்று, அவரது ஆய்வு குறித்து விரிவுரை ஆற்றுவார். 

மைக்கேல் பாட்டிஸ் விருது:

உலகெங்கிலும் உள்ள உயிர்க்கோளக காப்பகங்களை நிர்வகிப்பதில் சிறந்த சாதனை படைத்ததற்காக டாக்டர் மைக்கேல் பாடிஸ்ஸின் நினைவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை  விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் 12,000 டாலரும் ரொக்க பரிசாக வழங்கப்படுவது வழக்கம். யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோளகத்தின் (Man and the Biosphere (MAB) Programme) திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு கவுன்சிலின் முடிவைப் பின்பற்றி இந்த விருது 2004 இல் நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, MAB இந்த ஆண்டு தகுதியான 16 வேட்பாளர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

மார்ச் 2023 இல், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜகதீஷ் பக்கனின்  "நிலையான வாழ்வாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சமூக அடிப்படையிலான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் அவரது ஆய்வை  2023 விருதுக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில் தற்போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் ஷரோன் ரைட், நூசா உயிர்க்கோளக காப்பகத்தில் பணிபுரிந்ததற்காக விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து:

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பக்கன் ஜகதீஷை வாழ்த்தி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பக்கன், யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (#BiosphereReserveManagement) #MichelBatisseAward-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget