மேலும் அறிய

Ramadoss: பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காதது ஏன்?- ராமதாஸ் கேள்வி

பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பெரும் அநீதி என்றும் அவர்களுக்கு உடனடியாக சமூகநீதி வழங்கப்பட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பெரும் அநீதி என்றும் அவர்களுக்கு உடனடியாக சமூகநீதி வழங்கப்பட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

''திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றியவர்களுக்கு  மூத்த பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக 14 பேராசிரியர்களிடமிருந்து 25.04.2019ல் விண்ணப்பம் பெற்று 4 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை!

உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில் பேராசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படாதது நியாயமல்ல. இதில் செய்யப்படும் தாமதத்தால் கடந்த 4 ஆண்டுகளில் 10 பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே  ஓய்வு பெற்று விட்டனர்!

ஒரு மூத்த பேராசிரியர் கூட  இல்லை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்றைய நிலையில் ஒரு மூத்த பேராசிரியர் கூட  இல்லை. மூத்த பேராசிரியர் என்பது கிடைப்பதற்கரிய பெருமை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும்.  தகுதியுள்ள பேராசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது அநீதி!

7 பேர் கொண்ட தேர்வுக் குழுவுக்கு மாநில அரசின் பேராளர் நியமிக்கப்படாததுதான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக பேராளரை  நியமித்து, மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.''

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதவி உயர்வில் உள்ள சிக்கல்கள் குறித்து ராமதாஸ் பேசி இருந்தார். அதில், ''தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

எந்த பதிலும் வரவில்லை

ஆனால், எந்த பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 6000-க்கும் கூடுதலான ஆசிரியர்களும் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் கூட, அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தமிழக அரசின் நிதி நெருக்கடி தான் ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கான காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, பிற அரசுத்துறையினருக்கான பதவி உயர்வுகள் மறுக்கப்படாத நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வையும், தர ஊதிய உயர்வையும் வழங்க மறுப்பது நியாயம் அல்ல. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதற்கு நிதி நெருக்கடியைக் கடந்து நடைமுறைச் சிக்கல்களும் முக்கியக் காரணம் ஆகும். பிற அரசுத்துறையினருக்கு காலம் சார்ந்து தானாக பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை தங்களின் செயல்பாட்டு சாதனைகளுடன் விண்ணப்பித்து அதனடிப்படையில் தான் பெற முடியும். இந்நடைமுறை பணி மேம்பாட்டுத் திட்டம் (Career Advancement Scheme) என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் பணி மேம்பாட்டுத் திட்டக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து தீர்மானிக்கும். கல்லூரிகளைப் பொறுத்தவரை மண்டல இணை இயக்குனர் இது பற்றி முடிவெடுப்பார். ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது சரி செய்யப்பட வேண்டும்.

பொருளாதார இழப்பு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது அவர்களின் பணி நிலையையும், ஊதியத்தையும், பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தையும் கடுமையாக பாதிக்கும். கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, படிநிலை சார்ந்த பதவி உயர்வு என்பது கவுரவம் சார்ந்த விஷயமும் ஆகும்.

கடந்த சில பத்தாண்டுகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்கள் சராசரியாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கின்றன. ஒருவர் முனைவர் பட்டம் அல்லது தேசிய/ மாநிலத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று உதவிப் பேராசிரியர் பணியில் சேர 35 முதல் 40 வயதாகிவிடும்.

உதவிப் பேராசிரியராக பணியில் சேரும் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு 16 ஆண்டுகள் ஆகும். 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மூத்த பேராசிரியராக பதவி உயர்த்தப்படுவார். கடந்த காலங்களில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருபவர்கள் எளிதாக மூத்த பேராசிரியர் நிலையை அடைந்து ஓய்வு பெற முடியும். ஆனால், இப்போது போதிய அளவில் பணி நியமனங்கள் நடக்காததால் பணியில் சேர அதிக வயது ஆவது, பதவி உயர்வில் செய்யப்படும் தாமதம் ஆகியவற்றால் பேராசிரியர் என்ற நிலைக்கு உயர்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. மூத்தப் பேராசிரியர் என்ற நிலையை அடைவது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணம் பதவி உயர்வு வழங்கப்படாததுதான்'' என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget