மேலும் அறிய

Vetrimaaran:”நாம் முன்னேறிவிடக்கூடாது என்று சதி நடக்கிறது”ஒரே போடாக போட்ட வெற்றிமாறன்!

Vetrimaaran: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 25) நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் வெற்றி மாறன் பேசினர்.

Vetrimaaran: இந்த வருடத்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு:

தமிழ்நாடு அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில்,’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி,  சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கிறது:

”சினிமா மேடைகளில் மட்டுமே பேசிய எனக்கு இந்த மேடையில் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருந்து வருகிறது. தாய் தந்தையர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வறுமையில் இருந்தாலும் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.  அது கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் வேலை. கல்வியை எப்படி சிஸ்டமிக்காக அணுகவேண்டும் என்பதை இந்த நாலு வருடங்களில் நடந்திருக்கிறது.  இந்த வருடம் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை நினைத்தால் எனக்கு மிகவும்  நெகிழ்வாக இருக்கிறது. 

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் கல்வியில் நாம் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறோம் என்பது தான். இது சாதாரண விசயம் அல்ல.  நாம் கல்வியில் முதன்மையடைந்து விடக்கூடாது என்பதற்கான வேலைகளை சிலர் செய்கின்றனர். ஆனால் என்ன நடந்தாலும் நாம் உயர்ந்த இடத்திற்கு செல்வோம் என்பதை இதன் மூலம் பார்க்கப்படுகிறது. மாணவர்களை போல நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டும்.  காலை உணவு மிக முக்கியமானது. பள்ளியில் அது கிடைக்கிறது என்பதற்காகவே பல மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த வருடத்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக சொல்கின்றனர். அந்த அளவிற்கு திட்டங்களும் ஊக்கமும் அதை செயல்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு குழுவும் கிடைத்திருப்பது நமக்கு பெரிய நன்றி. இந்த அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி” என்று கூறினார்.

 

தலைப்பு செய்திகள்

"மேயர் ஏன் வரலன்னு , அவங்கக்கிட்ட கேளுங்க" முகாமில் எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் அதிரடி பதில்
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஊராட்சி ஒன்றிய வேலை அறிவிப்பு: சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்!
ஊராட்சி ஒன்றிய வேலை அறிவிப்பு: சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget