மேலும் அறிய

Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?

விசிக முன்னாள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக திகழும் கட்சி விசிக. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமானவர் ஆளூர் ஷாநவாஸ். இவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

திருச்சி கிழக்கில் ஷாநவாஸ்?

விசிக-வில் இவர் பொறுப்பு வகித்து வந்தாலும் இவர் திமுக-வின் மிகப்பெரிய ஆதரவாளராகவே கட்சியில் அறியப்பட்டு வருகிறார். தேர்தலுக்கு பின்பு தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு அளித்ததிலும் ஆளூர் ஷாநவாஸிற்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. 

திமுக-வில் இணைவார் என்று ஷாநவாஸ் பற்றி தகவல்கள் வெளியாகி வந்த  நிலையில், அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அவர் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

என்ன கணக்கு?

திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் சுயேட்சையாக களமிறங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகளவு உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 40 ஆயிரம் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளது. 

சுயேட்சையாக களமிறங்கினாலும் ஷாநவாஸ் வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஆனாலும், இந்த தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெருவாரியாகவும், பிற சமுதாயத்தினரின் வாக்குகளையும் ஓரளவு பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக மாற ஷாநவாஸ் திட்டமிட்டுள்ளார். 

இதுதொடர்பான பணிக்கு தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தனது வாக்கு பலத்தை காட்டிய பிறகு தனக்கென தனிக்கட்சி தொடங்குவதே அவரது திட்டமாக தற்போது உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கான ஒரு வலுவான கட்சி இல்லாமல் இருப்பதால் அதற்கான வெற்றிடத்தை தான் பிடிக்க ஷாநவாஸ் திட்டமிட்டுள்ளார். 

திமுக-வில் இணையாதது ஏன்?

சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள அவர் தனிக்கட்சி தொடங்கி ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தனித்துவ அடையாளம் பெற ஆர்வம் காட்டி வருகிறார். விசிக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தாலும் அங்கு தனக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்? தனது அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற பல்வேறு கேள்விகள் அவரது ஆதரவாளர்களாலே முன்வைக்கப்பட்டதால் ஷாநவாஸ் திமுக-வில் இணையும் முடிவில் இருந்தும் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற புதிய நிலைப்பாட்டை தவெக முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது முதலே தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டால் எதிர்காலத்தில் தானும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற இலக்கை அடையலாம் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட முடிவு செய்துள்ளார். இதனால், இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு ஷாநவாஸின் அதிகாரப்பூர்வமான சில முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
பாலியல் புகாரில் தவெக நிர்வாகி.. சொந்த கட்சிக்கு சுயஒழுக்கம் பாடம் எடுங்க.. விஜயை விமர்சித்த கனிமொழி!
பாலியல் புகாரில் தவெக நிர்வாகி.. சொந்த கட்சிக்கு சுயஒழுக்கம் பாடம் எடுங்க.. விஜயை விமர்சித்த கனிமொழி!
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget