மேலும் அறிய

Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு

Thiruchendur Temple : ஜூலை 1ஆம் தேதி முதல் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில்- பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பில், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினுள், பக்தர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசி (Mobile Phone) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேற்படி நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக எதிர்வரும் 01.07.2026 முதல் கைபேசி பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையானது. மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

திருச்செந்தூர் கோயில்-மொபைல் போன் தடை

அதன் பொருட்டு. திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100/- விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்தக்குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே, திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவே, பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் போது தங்களது கைபேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பக்தர்கள். தமது கைபேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கைபேசி வைப்பிடங்கள் (Mobile Deposit Counter) நிறுவப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும்

பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக, மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி, பொது அறிவிக்கை அமைப்பு (Public Addressing System). ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. எனவே,  உயர்நீதிமன்ற உத்தரவின்படி எதிர்வரும் 01.07.2026 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசியின்றி தரிசனம் செய்தலை முழுமையாக தேவையான ஒத்துழைப்பு நல்கிட பக்தர்கள் மற்றும் நடைமுறைப்படுத்த பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget