மேலும் அறிய

"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!

'எங்களிடம் நீட் வினாத்தாள் இருக்கிறது, 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் வரை கொடுத்தால் அதைத் தருகிறோம்' என வலை விரிக்கின்றனர். 10 லட்ச ரூபாய் வரை இந்த டீல் பேசப்படுகிறது.

10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிந்துள்ளதாகக் கூறப்படுவது மிகப்பெரிய மோசடி என்று ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த சர்ச்சை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், "உண்மையில் வினாத்தாள் கசியவில்லை, அப்பாவி பெற்றோர்களைக் குறிவைத்து நடக்கும் மாபெரும் மோசடி இது" என ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், பேராசிரியர் காமகோடி, நீட் தேர்வில் நாடு தழுவிய அளவில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்தவொரு தரவு ஆதாரமும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: ’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்! 

10 லட்ச ரூபாய் வரை டீல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே, சில இடைத்தரகர்கள் மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்புகொள்கின்றனர். 'எங்களிடம் நீட் வினாத்தாள் இருக்கிறது, 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் வரை கொடுத்தால் அதைத் தருகிறோம்' என வலை விரிக்கின்றனர். 10 லட்ச ரூபாய் வரை இந்த டீல் பேசப்படுகிறது.

பதற்றத்தில் இருக்கும் பெற்றோர்களும் அதை நம்பி பணத்தைக் கொடுத்து விடுகின்றனர். ஆனால், உண்மையில் அந்த கும்பலிடம் எந்த வினாத்தாளும் இருப்பதில்லை. ஏதோ ஒரு போலியான வினாத்தாளை நம்பிக் கொடுத்து விடுகிறார்கள்.

சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவு

பணம் கொடுத்த மாணவர் தனது சொந்த உழைப்பால் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், 'நாங்கள் கொடுத்த வினாத் தாளால்தான் உங்கள் பிள்ளை பாஸ் ஆனார்' என அந்த கும்பல் உரிமை கொண்டாடுகிறது. ஒருவேளை மாணவர் தேர்வில் தோல்வியடைந்தால், பணத்தை வாங்கிய இடைத்தரகர்கள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள். இதுதான் களத்தில் நடக்கும் உண்மையான மோசடி," என அவர் தெரிவித்தார்.

மேலும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு, ஐஸர் தேர்வுக்கும் இப்படிதான் மோசடி செய்யப்பட்டதாகவும் குறுக்கு வழியில் செல்வதாக நினைத்து, போலியான வாக்குறுதிகளை நம்பி பெற்றோர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பான லட்சக்கணக்கான ரூபாயை இதுபோன்ற மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகார் எண் வெளியீடு

இதுதொடர்பான முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget