மேலும் அறிய

சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக-விலிருந்து விலகப்போவதாக பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை விஜயபாஸ்கர் ராஜினமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

சட்டமன்றத்தில் இபிஎஸ்ஸின் உத்தரவை மீறி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் சி.விஜயபாஸ்கரும் ஒருவர்.

இதனால், கட்சியில் இவரின் புதுக்கோட்டையை மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

பின்னர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உட்பட 21 எம்.எல்.ஏ-க்களை மன்னித்து விட்டதாகவும், அவர்கள் மீதான தகுதி நீக்க கோரிக்கையை திரும்பப்பெறுவதாகவும் இபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்ட கடிதம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், விஜயபாஸ்கர் இபிஎஸ்ஸிடமிருந்து ஒதுங்கியிருந்தார். இதற்கிடையில், அவர் திமுகவில் இணையப்போவதாகவும், உடனடியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

மேலும் விஜயபாஸ்கர் இன்று எக்ஸ் தளத்தில், "தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’

உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?

உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" என்று இபிஎஸ்ஸை விமர்சித்து, கட்சியிலிருந்து விலகப்போவதாக மறைமுகமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், விஜயபாஸ்கர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து, தனது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதத்தை சமர்பித்திருக்கிறார்.

இதனால், விஜயபாஸ்கர் அடுத்து கட்சியிலிருந்து விலகி திமுக-வில் சேர்வாரா அல்லது தவெக-வில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புறநகரில் பிளாட் வாங்குபவரா நீங்கள் ? இந்த ஆபத்துகளைத் தவிர்க்க இதுவே வழி
புறநகரில் பிளாட் வாங்குபவரா நீங்கள் ? இந்த ஆபத்துகளைத் தவிர்க்க இதுவே வழி
Jaishankar: உணவுக்கு பெரும் நெருக்கடி வரும்.. ரெடியா இருங்க.. எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர்!
Jaishankar: உணவுக்கு பெரும் நெருக்கடி வரும்.. ரெடியா இருங்க.. எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர்!
அக். 10 கடைசி நாள்! 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி?
அக். 10 கடைசி நாள்! 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி?
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget