மேலும் அறிய
Advertisement
ஆளுநரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு - கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு ஜாமீன்
கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு மதுரை மாவட்ட நடுவர் நீதித்துறை நீதிமன்றம் JM 5 ஜாமீன் வழங்கி உத்தரவு
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்து அந்த கட்சியில் இருந்து வெளியேறி தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து அதன் பொதுச் செயலாளராக இருக்கிறார். மேலும் பல்வேறு ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை பேசக்கூடியவர் இந்நிலையில் தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பின்பு அவர் மீது சமூக வலைதளங்களில் அவரை விமர்சனம் செய்து பேசியதாகவும் சில அவதூறான கருத்துக்களை பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரது வீட்டில் இருந்த பசும்பொன் பாண்டியனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு மதுரை மாவட்ட நடுவர் நீதித்துறை நீதிமன்றம் JM 5 ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கிடா சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கு - காவல் நிலையத்தில் மனு அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் காரியாபட்டியைச் சேர்ந்த கோபால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்த ஆண்டும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மே 28 தேதி கிடா சண்டை விழாவை நடத்த அனுமதி கோரி ஆவியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தும், இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே, மே 28ஆம் தேதி ஆவியூர், அய்யனார் கோவில் அருகே கிடா சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கிடா சண்டை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் ஆவியூர் காவல் நிலைத்தில் மனு அளிக்கலாம் என அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion