மேலும் அறிய

Schools Holiday: தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை! அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

Leopard Scar in Ariyalur: அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

அரியலூரில் சிறுத்தை:

கடந்த ஒரு வார காலமாக மயிலாடுதுறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி வந்தது சிறுத்தை. மலைகளே இல்லாத டெல்டா மாவட்டத்தில் எங்கிருந்து வந்தது இந்த சிறுத்தை என்ற கேள்விக்கே இடம் கிடைக்காமல் இருந்த சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுத்தையை பிடிக்க 50 பேர் கொண்ட வனத்துறையினர், 45 கேமராக்கள், 7 கூண்டுகள், சிறப்பு படையினர் மயிலாடுதுறையில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த கூண்டிலும் சிக்காமல் இருந்த வந்த சிறுத்தை, இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சுற்றுச்சுவரை தாவிக்குதித்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. இதை அந்த மாவட்ட வனத்துறையினர் மற்று் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 3 மணி நேரம் மட்டுமே அரியலூர் மாவட்டம் என்பதால் சிறுத்தை வந்திருக்க சாத்தியம் என்றும், காவிரி கரையோரமாகவே சிறுத்தை வந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறையில் உலா வந்த அதே சிறுத்தைதான் அரியலூரில் வலம் வருகிறதா? என்றும், அரியலூரில் உலா வந்தது வேறு சிறுத்தையா? என்றும் ஒருபுறம் ஆய்வு செய்து வருகின்றனர். அதேசமயம், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, செந்துறை பகுதியில் வனத்துறையினரும், காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே சிறுத்தையா?

சிறுத்தை பிடிபடாமல் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருவது டெல்டா மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைந்து அந்த சிறுத்தையை பிடித்து அடர் வனத்தில் விட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரியலூர் சிறுத்தையின் தெளிவாக புகைப்படங்கள் கிடைத்தாலோ அல்லது அவற்றின் எச்சம், எடிஎன்ஏ ஆய்வு போன்ற சோதனைகளுக்கு பிறகே, இது மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தையா ?அல்லது இது வேறு சிறுத்தையா? என உறுதியாக கூற முடியும் என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Train Service: 5 முக்கிய ரயில்கள் எழும்பூர் வராது.. மக்களே நோட் பண்ணுங்க.. எத்தனை நாட்கள்?
Train Service: 5 முக்கிய ரயில்கள் எழும்பூர் வராது.. மக்களே நோட் பண்ணுங்க.. எத்தனை நாட்கள்?
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் காஞ்சிபுரம் ஆய்வு: செயின்ட்-கோபைன், ரெனால்ட் டஸ்டர் ஓட்டி அசத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் காஞ்சிபுரம் ஆய்வு: செயின்ட்-கோபைன், ரெனால்ட் டஸ்டர் ஓட்டி அசத்தல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget