சிறுபான்மையினர் ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்..!
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸை தமிழக அரசு நியமித்துள்ளது
![சிறுபான்மையினர் ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்..! Appointment of Peter Alphonse as Chairman of the Minorities Commission சிறுபான்மையினர் ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/2f5eadabed44b10eba2f51c76c4b942a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினர் நலன்களை பேணிக்காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் நாள் அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு மீண்டும் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய சட்டம் 2010-இன் படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ள்ளார்.
கடந்த 1989 மற்றும் 1991ஆம் ஆண்டு தேர்தல்களில் தென்காசி தொகுதியில் இருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக பீட்டர் அல்போன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)