மேலும் அறிய

'நாம் தமிழரை விட 30 சதவீத வாக்குகள் கூடுதலாக வாங்கி காட்டுகிறோம்’ - சீமானுக்கு அண்ணாமலை பதிலடி!

"சீமானின் சவாலுக்கு பாஜக தயார். ஒரு சதவீதம் என்ன? நாம் தமிழரை விட 30 சதவீதம் வாக்குகளை கூடுதல் வாங்கி காட்டுகிறோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம்."

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், " ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. இதனால் கொள்கை ரீதியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வட கிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இராணுவ பாதுகாப்பு குறைக்கப்படுகிறது. கோடிக்கணக்கான நபர்கள் தேர்தல் நடத்த பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக, தமாகா போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன.‌ ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்.

அதானிக்கு நாம் சப்போர்ட் பண்ண வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதானி என்ற பெயரில் இந்தியா மீது போர் கொடுக்கிறார்கள். ஜார்ஜ் சோரேஸ் மோடி, இந்தியா மீது வன்மம் கக்கும் நபர். ஜார்ஜ் சோரேஸ் இந்தியாவின் எதிரி. ஜார்ஜ் சோரேசின் ஊதுகுழலாக ராகுல் காந்தி பேசினார். இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இந்தியா வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. தமிழ்நாட்டிற்கு எதுவும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என முதல்வர் பொய் சொல்லியுள்ளார். 10 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு தந்ததை 13 பக்க வெள்ளை அறிக்கை தந்துள்ளோம். மத்திய அரசு அதிக பணம் வந்த மாநிலம் தமிழகம். ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் இந்தியா கூட்டணியில் முன்னணியில் நிற்கிறார்கள். இந்தியா கூட்டணியை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 சீட் ஜெயிப்போம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் பல நாடுகளில் உள்ளது. இதனால் அதிகாரிகள் மீதான சுமை குறையும். இது இந்தியா வளர்ச்சியை அதிகப்படுத்தும். இதனை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள்.‌குடும்ப அரசியலை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள். இதனால் தேர்தல் செலவு குறையும். நான் பேசாத செய்திகளை பேசியதாக பத்திரிகைகள் போடுகிறார்கள்.‌ எந்த காரணத்திற்காகவும் ஒரு கட்சியை தரம் தாழ்த்தி, தவறாக பேசி கட்சியை வளர்க்க வேண்டும் என நினைக்க மாட்டேன். நான் நேரடியாக கருத்து சொல்லும் நபர். பின்முதுகில் நான் பேசுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திமுகவினர் பாஜக நபர்களை குறிவைத்து கூலிப்படை வைத்து கொல்கிறார்கள். திமுக கூலிப்படை ஏவி விடுகிறது. மாணவர்களுக்கு காலை உணவு தந்த இஸ்கான் கிச்சனை திமுக நிறுத்தியது ஏன்? மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. காலை உணவு திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என திமுக சொந்தம் கொண்டாடமால் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

சீமானின் சவாலுக்கு பாஜக தயார். ஒரு சதவீதம் என்ன? நாம் தமிழரை விட 30 சதவீதம் வாக்குகளை கூடுதல் வாங்கி காட்டுகிறோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். எங்களுக்குள் கட்சி அடிப்படையில் முரண் இருந்தாலும், திமுகவை எதிர்க்க சீமான் வேண்டும். கோவை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்றது தமிழக காவல்துறைக்கு கரும்புள்ளி. திமுகவிற்கும் கரும்புள்ளி. கோவை ஆபத்தில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை. நேரடியாக மத்திய அரசுடன் தொடர்புடைய நபர் உறுப்பினராக வேண்டும். தீவிரவாத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி முடிவு செய்தால் ஆளுநர் கையெழுத்திட கூடாது.

திமுக வாயில் வடை சுடுகிறார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கூச்சம் இல்லாமல் பொய் சொல்வதில் கோல்ட் மெடல் திமுகவிற்கு தர வேண்டும். விஷ்வ கர்மா யோசனா திட்டத்தை கி.வீரமணி தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. அது குலக்கல்வி அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் 39 க்கு 39 தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். 25 ஜெயிக்கும் அளவிற்கு கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும் என்பது எனது ஆசை. 25 இடங்களில் வெற்றி பெறும் அளவிற்கு தயாராக உள்ளோம். அதேசமயம் அத்தொகுதிளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டால் அவர்களை வெற்றி பெற செய்வோம்" எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget