மேலும் அறிய

ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை! மோசமான நிலையில் பள்ளிகள்.. நிதி எல்லாம் எங்கே? ஆவேசமான அண்ணாமலை

மத்திய அரசு கடந்த 2023 – 2024 ஆண்டு ₹398.52 கோடி. சென்ற 2024 - 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கிய தொகை ₹324.2 கோடி. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்தில், தேசிய ஊட்டச்சத்து திட்டமான போஷன் அபியான் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அண்ணாமலை பதிவு: 

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தமிழகத்தில், தேசிய ஊட்டச்சத்து திட்டமான போஷான் அபியான் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், தமிழகப் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய உணவுத் திட்டத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

போஷன் அபியான் திட்டம்

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிறக்கும் காலத்தில், அவர்களின் ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிஅவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம் போஷன் அபியான். நம் குழந்தைகள் பசியின்றிக் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கர்மவீரர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பட்டு, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் மேம்படுத்தப்பட்ட திட்டம் மதிய உணவுத் திட்டம்.

அதற்கான நிதியில் ஒரு பங்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், நம் குழந்தைகள் கல்வி குறித்தோ, நம் கர்ப்பிணி சகோதரிகள் குறித்தோ எந்தக் கவலையுமில்லாமல், தனது தந்தையின் வரலாறை, பள்ளிப் பாடத்திட்டத்தில் திணிப்பதில்தான் குறியாக இருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

நிதி எங்கே செல்கிறது?

போஷான் அபியான் திட்டத்துக்கு, மத்திய அரசு கடந்த 2023 – 2024 ஆண்டு ₹398.52 கோடி. சென்ற 2024 - 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கிய தொகை ₹324.2 கோடி. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் ஊழல் செய்தது போதாதா? ஒட்டு மொத்த நிதியையுமே முடக்கும் திட்டமா?

அரசுக்கு வலியுறுத்தல்

உடனடியாக, போஷான் அபியான் திட்ட ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் மதிய உணவுக்கான பொருள்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தனது பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget