யார் அந்த சார்? நூதன போராட்டத்தில் இறங்கிய அதிமுக.. எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் பரபரப்பு!
அண்ணா பல்கலைகழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுக நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கையில் எடுத்த அதிமுக:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிக்கு நேர்ந்துள்ள கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே நடுங்க வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளேயே வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தொடர்பே இல்லாத ஒரு நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக அதிமுக கூறி வருகிறது.
யார் அந்த சார்?
இதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது, ஞானசேகரன் தனது செல்போனில் '' சார் '' என யாரிடமோ பேசியதாக மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுக நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. யார் அந்த சார்? 'Save Our Daughters' என ஆங்கிலத்தில் அச்சிட்ட போஸ்டரை தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிக்க: Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?