மேலும் அறிய

ககன்தீப்சிங் பேடி குழு அறிக்கை ஒரு ஏமாற்று வேலை; அரசின் நாடகம் பலிக்காது! - அன்புமணி இராமதாஸ் காட்டம்

ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ககன்தீப்சிங் பேடி குழு அறிக்கை தாக்கல்: ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி குழு 11 மாதங்களுக்குப் பிறகு இன்று அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்திருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த  திமுக அரசு, இப்போதாவது ககன்தீப்சிங் பேடி குழுவின் அறிக்கையை பெற்றிருப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அறிவித்துள்ள வேலை நிறுத்தமும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தமும் தான் காரணம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், 55 மாதங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்த போதே  பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.  அதற்கான அனைத்து பரிந்துரை அறிக்கைகளும் கடந்த ஆட்சிக் காலத்திலேயே குழு அமைத்து பெறப்பட்டிருந்தன. ஆனால், கடந்த தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த 10 வாக்குறுதிகளில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டுமே  நிறைவேற்றியுள்ள திமுக,  பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் வழக்கம் போலவே ஏமாற்றுவதற்கு தான் முயற்சி செய்தது.

ஆனால், அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதால் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி தான் ககன்தீப்சிங் பேடி குழுவை அரசு அமைத்தது. ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு எந்த பணியையும் செய்யாமல்  இந்தக் குழு உறங்கிக் கொண்டிருந்தது.  அறிக்கைகள் வாயிலாகவும், மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் போது நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நான் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 18&ஆம் தேதி முதல்  கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது.  அப்போதும் செப்டம்பர் இறுதியில் இறுதி அறிக்கைக்கு மாற்றாக, எந்த பரிந்துரையும் இல்லாத இடைக்கால அறிக்கையை மட்டுமே ககன்தீப் சிங் பேடி குழு தாக்கல் செய்தது.

அதன்பிறகும் ககன் தீப்சிங் குழு எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாத நிலையில், விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நான் தான் வலியுறுத்தி வந்தேன். அதன் காரணமாகவும்,  வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்திருப்பதாலும் தான் இப்போது திடீரென ககன்தீப் குழுவின் அறிக்கையை அரசு அவசரமாக பெற்றிருக்கிறது.

திமுக அரசின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது, ககன் தீப் குழுவின் அறிக்கையை பெற்றதும் கூட, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அக்கறையால் அல்ல. மாறாக, வரும் 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருக்கும் நிலையில், ககன் தீப் சிங் குழுவின் அறிக்கையை பெற்று விட்டோம்; விரைவில் அதன் மீது முடிவெடுப்போம் என்று ஆசை காட்டி, அவர்களின் போராட்டத்தை கைவிடச் செய்யும் ஏமாற்று வேலை தான். இப்படி ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக கடந்த நவம்பர் 10-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலேயே,‘‘இன்னும் 3 மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதற்குள்ளாக ககன்தீப்சிங் பேடி குழு, அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது அல்லது தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன் அறிக்கையை பெற்றுக் கொண்டு முடிவெடுக்க கால அவகாசம் இல்லை என்று கூறி அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான் திமுக அரசின் திட்டம். திமுகவின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும்” என்று திமுகவின் ஏமாற்று வேலையை அம்பலப்படுத்தியிருந்தேன்.  அதேபோல் தான்  திமுக அரசு இப்போது  செய்திருக்கிறது.

திமுக அரசின் இத்தகைய மோசடிகளையெல்லாம் அரசு ஊழியர்களும்,  ஆசிரியர்களும் மிகவும் நன்றாக அறிவார்கள். அவர்களை இத்தகைய மோசடிகள் மூலம் ஏமாற்ற முடியாது. எனவே, அரசு ஊழியர் அமைப்புகள்  ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட வேண்டும். மீதமுள்ள கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்றும். அவ்வாறு செய்ய மறுத்தால்  அரசு ஊழியர்களும், பொதுமக்களும் அளிக்கவிருக்கும் ஜனநாயக முறையிலான தண்டனையிலிருந்து திமுக ஒருபோதும் தப்ப முடியாது. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமையும் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாத அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பாமக நிறைவேற்றும் என உறுதியளிக்கிறேன்.

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
"தாய் மாமன் விஜய் என்ன சொல்லப்போறாரு?" - 19 வயது இளைஞர் படுகொலையால் கொந்தளித்த சீமான்
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget