மேலும் அறிய

வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!

முந்தைய அரசால்  உருவாக்கப்பட்டு உழவர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு திட்டத்தை புதிய அரசு செயல்படுத்தக் கூடாது - அன்புமணி

வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியால் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டதை செயல்படுத்துவதற்கும், இந்தத் திட்டத்தின்படி வேளாண் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பட்டியலிட்டும் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் துறை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, உழவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த த.வெ.க. அரசு முயல்வது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளின் பணிகளும், நோக்கங்களும் வெவ்வேறானவை.

எழுந்த கடும் எதிர்ப்பு

அதை கருத்தில் கொண்டு தான் 1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒன்றாக இருந்த இந்தத் துறைகள் காலப்போக்கில் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால், உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் இந்தத் துறைகளில் பணியாற்றும் கள அதிகாரிகள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, அனைத்துத் துறை பணிகளையும் செய்ய வேண்டும் என்று  2023-ஆம்  ஆண்டு  அக்டோபர் 30-ஆம் நாள்  திமுக  ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஆனால், 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை நிறுத்தி வைத்த திமுக அரசு,  திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இரு ஆண்டுகள் கழித்து 2025-ஆம் ஆண்டு  இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான  நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை பிறப்பித்தது. அதன்பின் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளின் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

புதிய அரசு அவசரம்

எனினும், வேளாண் துறை அதிகாரிகள், உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. முந்தைய திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்துவதில் புதிய அரசு அவசரம் காட்டுகிறது.  இதற்காக கடந்த 19-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் அதிகாரிகளுக்கான பணி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களுக்கும் குறைந்தது வாரம் ஒரு முறை செல்ல வேண்டும்; இதற்காக வாரத்திற்கு நான்கு நாள்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டும்; களப்பணியை முடித்தபின் அலுவலகங்களுக்கு சென்று நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என 56 வகையான பணி நிபந்தனைகளும், அதற்கும் மேலாக உயரதிகாரிகள் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இது அநீதியானது மட்டுமின்றி சாத்தியமற்றதும் ஆகும்.

அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வல்லமை பெற்றிருக்கிறார்களோ, அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவார்ந்த செயல். வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது. அதேபோல், தோட்டக்கலை அதிகாரிகளுக்கு நெற்பயிரைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.

இந்தத் திட்டத்தைச்  செயல்படுத்துவதன் மூலம் கள அதிகாரிகளுக்கு பணிச்சுமை குறையும்; இதுவரை 10 முதல் 12 கிராமங்களை கவனித்து வந்த அதிகாரிகள் இனி 3 முதல் 4 கிராமங்களை கவனித்தால் போதுமானது என்று அரசு விளக்கமளிக்கிறது. இதை ஏற்க முடியாது. இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படலாம். இது வேளாண் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

முந்தைய ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் முதன்மையானது வேளாண் துறை. கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது. அத்தகைய அரசால்  உருவாக்கப் பட்டு உழவர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு திட்டத்தை புதிய அரசு செயல்படுத்தக் கூடாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வேளாண் துறை வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடக் கூடாது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget