மேலும் அறிய

தவெக ஆட்சியிலும் தொடரும் துயரம்; 2 மாதங்களில் 4 பேர் மரணம்- நாகர்கோவில் லாக்கப் டெத்துக்கு எழும் கண்டனம்

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தி, சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சித்திரவதை கொலை கண்டிக்கத்தக்கது என்றும் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து இன்று அவர் கூறி உள்ளதாவது:

பெட்டிக்கடையில் போதைப்பாக்குகளை விற்பனை செய்ததற்காக நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி, சிறைக்காவலர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விசாரணைக் கைதி உயிரிழந்தது தெரிந்தும் அதை மூடி மறைக்க  முயன்றதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை உண்மை எனில் காவல்துறை, சிறைத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த ஈத்தங்காடு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்ற உடற்திறன் மாற்றுத்திறனாளி, அவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் 200 கிராம் குட்கா எனும் போதைப்பாக்கை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகக் கூறி கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி நேற்று முன்நாள் திங்கள்கிழமை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவம் பயனின்றி சபரிநாதன் உயிரிழந்த நிலையில், அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்து விட்டதாகக் கூறி மூடி மறைக்க காவல்துறையினர் முயன்றதாக கூறப்படுகிறது.

சபரிநாதன் இறப்பில் மர்மம்

ஆனால், சபரிநாதன் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரை சிறைக்காவலர்கள் கொலை செய்து விட்டு,  அதை மூடி மறைக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் சபரிநாதனின் உடலில் 19 காயங்கள் இருந்ததும், குறைபாடுள்ள  வலது கை 3 இடங்களில் உடைக்கப்பட்டிருந்ததும்,  இடது கை, இரு கால்கள், தலை, மார்பு ஆகிய உறுப்புகளும் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதன் பிறகுதான் இதற்கு காரணமான நாகர்கோவில் தலைமை சிறைக்காவலரும், இரு சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நாகர்கோவில் சிறையில் சபரிநாதனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் மன்னிக்க முடியாதது. சிறைக்காவலர்களை கோபப்படுத்தும் வகையில் கூட அவர் எதுவும் செய்யவில்லை. ஒரு தவறும் செய்யாத என்னை எதற்காக சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு அவர் தொடர்ந்து ஓலமிட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த  சிறைக்காவலர்கள் அவரது கைகள் மற்றும் கால்களைக் கட்டி, படுக்க வைத்து கொடூரமாக தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த சபரிநாதன் ஞாயிற்றுக் கிழமை இரவே இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை திங்கள் கிழமை காலை உயிருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தான் அவர் உயிரிழந்து விட்டதாகவும் சிறைத்துறையினர் ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றியுள்ளதாக கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உறவினர்களுக்கு காவல்துறை அழுத்தம்

சபரிநாதன் உயிரிழந்த பிறகும் கூட அவர் இயற்கையாகவே மரணமடைந்ததைப் போலவும், அவரது மறைவுக்கும் சிறைத்துறையினரின் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த காவல்துறையும், சிறைத்துறையும் முயன்றதாக கூறப்படுகிறது. இறந்து போன சபரிநாதனின் உடலை உடனே வாங்கிச் சென்று தகனம் செய்யவும் உறவினர்களுக்கு காவல்துறை அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால், அதற்கு குடும்பத்தினர் உடன்பட மறுத்து போராடியதால்தான், தாமதமானாலும் கூட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இல்லாவிட்டால் இந்தக் கொலை மூடிமறைக்கப்படிருக்கும்.

அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் வரிசையில் தவெக ஆட்சியில் சபரிநாதனின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே இந்த கொலையை மூடி மறைக்க முயற்சிகள் நடந்த நிலையில், தமிழக காவல்துறையினர் விசாரித்தால் இந்த வழக்கில் நீதி கிடைக்காது. எனவே, சாத்தான்குளம், மடப்புரம் வழக்கின் விசாரணைகள் எவ்வாறு சிபிஐக்கு மாற்றப்பட்டனவோ?  அதேபோல், இந்த வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  சிறைக் காவலர்களுக்கு வழக்கின் விசாரணை முடியும் வரை பிணை மறுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

2 மாதங்களில் 4 பேர் மர்ம மரணம்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிந்தைய இரு மாதங்களில் காவல்துறையினரின் காவலில் இருந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதற்கான காரணங்களை கண்டறியவும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கொடூரமாக கொல்லப்பட்ட சபரிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும்,  அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கவும்  தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget