மேலும் அறிய

Anbumani ramadoss | சமூக அநீதிக்கு முடிவு கட்டுவது எப்போது?.. நீட் தற்கொலை குறித்து அன்புமணி கேள்வி!

தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வுக்கு பயந்து மாணவமணிகள்  தற்கொலை செய்து கொண்டதற்கு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். 

நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் நடைபெறும் நிலையில், அதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது இந்த முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு முந்தைய நாட்கள் தற்கொலை காலமாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மட்டும் 3 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு மேட்டூர் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவர் தனுஷ் ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதிய போதிலும் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. மூன்றாவது முறையாக நீட் தேர்வில் பங்கேற்கும் நிலையில் அதில் எப்படியும் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்று தனுஷ் தீவிரமாக படித்து வந்தார். நேற்று நள்ளிரவைக் கடந்து 1.00 மணி வரை தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்த தனுஷ், அதற்குப் பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றால், அவர் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்  என்பதை உணர்ந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு நீட் கொடிய மாணவர்கொல்லியாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில்  13 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது 14&ஆவது நிகழ்வாக மாணவர் தனுஷ் தற்கொலை நிகழ்ந்துள்ளது. நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தவர்கள் தான் இந்த 14 மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவியர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்ளும் போது, அது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண முன்வர வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு முன்வராதது மிகவும் கவலையளிக்கிறது.

Anbumani ramadoss | சமூக அநீதிக்கு முடிவு கட்டுவது எப்போது?.. நீட் தற்கொலை குறித்து அன்புமணி கேள்வி!

மாணவர் தனுஷின் தற்கொலை தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் நிகழும் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும். அதற்கு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பது தான் சரியாக தீர்வாக இருக்கும். நீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழ்நாட்டையும், பிற மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்த நிலையிலும் கூட, தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லை. அதே நிலை நீடிக்க அனுமதிப்பது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பு சேர்க்கும் செயலாக இருக்கும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று முந்தைய ஆட்சியில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட  சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்து இருக்காது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் புதிய சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த சட்டத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டோம் என்பதுடன் கடமையை முடித்துக் கொள்ளாமல் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து வழிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி ஒத்துழைக்கும்.

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அனிதா தற்கொலை  உள்ளிட்ட நிகழ்வுகளில் வழங்கப்பட்டதைப் போன்று ரூ.7 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

Anbumani ramadoss | சமூக அநீதிக்கு முடிவு கட்டுவது எப்போது?.. நீட் தற்கொலை குறித்து அன்புமணி கேள்வி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்கிற விவசாயியின் இரண்டாவது மகன் தனுஷ். 2019ஆம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை முடித்த அவர் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற இயலவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தமது மருத்துவ கனவு தகர்ந்து போகும் என்கிற நினைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து போய் உள்ளார்.

தனுஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் இனிமேலும் ஈடுபடக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 

தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வுக்கு பயந்து மாணவ மணிகள்  தற்கொலை செய்து கொண்டதற்கு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். தகுதி திறமை என்ற போலித்தனமான வாதத்தால் தமிழகத்தில் மீண்டும் ஒரு உயிர் பலியாகக் கூடாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Embed widget