மேலும் அறிய

’’மேகதாது அணையால் தமிழ்நாடே பாலைவனமாகும்; இதெல்லாம் நடந்துடும்’’ அன்புமணி கடும் எச்சரிக்கை

கர்நாடகா மேகதாது அணையைக் கட்டிவிட்டால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். கர்நாடகாவில் பாசனத்திற்கான ஏக்கர் 30 லட்சம் ஆகும்; தமிழகத்தில் 10 லட்சம் ஆகக் குறைந்துவிடும்- அன்புமணி.

பெங்களூரு குடிநீர் தேவைக்கு எதற்கு இவ்வளவு டிஎம்சி தண்ணீர்? ஐந்து டி.எம்.சி தண்ணீர் தேவைக்கு 70 டிஎம்சி அணை கட்ட முயற்சிக்கிறார்கள்? என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கர்நாடக மாநிலத்தில் 1974 ஆம் ஆண்டு காவிரி பாசனம் மூலமாக 6.7 லட்சம் ஏக்கர், 1990ஆம் ஆண்டு 12 லட்சம் ஏக்கர் மற்றும் 2016 ஆம் ஆண்டு 21 லட்சம் ஏக்கர் என அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில்  29 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கான நிலமாக இருந்த நிலையில் தற்பொழுது 20  லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. தமிழகத்தில்  பாசனத்திற்கான  நிலம் குறைந்துள்ளது; கர்நாடகாவில் அதிகரித்துள்ளது.

10 லட்சம் ஏக்கராகக் குறைந்துவிடும்

கர்நாடகா மேகதாது அணையைக் கட்டிவிட்டால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். கர்நாடகாவில் பாசனத்திற்கான ஏக்கர் 30 லட்சம் ஆகும்; தமிழகத்தில் 10 லட்சம் ஆகக் குறைந்துவிடும். அணை கட்டப்பட்டு விட்டால் தமிழகத்தின் வாழ்வாதாரம் அனைத்தும் அழிந்துவிடும். 

காவிரி மூலமாக 60 சதவீதம் நெல் விவசாயம் நடந்து வருகிறது. அணை கட்டப்பட, 12 லட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படும்; இங்குள்ள மான், கரடி என அரிய வகை உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; மேலும் மேகதாது நடுவர் மன்றம் கொண்டு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்டது. இது தமிழகத்திற்கு தவறான முடிவு.. மேகதாது நடுவர் மன்றத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்..

மேகதாது அணையே கொண்டு வரவில்லை; முதல் அடியே வைக்காதபோது,  இப்படி இரண்டாவது அடியாக  மேகதாது நடுவர் மன்றத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழக சட்டமன்றத்தில் மேகதாது விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேகதாது விவகாரத்தில் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு சார்பாக தொடர வேண்டும்.

தண்ணீருக்காக மேகதாது அணைக்கொண்டு வருவதாக கூறுகிறார்கள்; பாசனத்திற்காக கொண்டுவரப்பட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. முதல்வர் டி.கே.சிவக்குமார் தொகுதியில்தான் அணை கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு

மேகதாது விவகாரத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதைப்பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அங்கு அணை கொண்டு வரப்பட்டுவிட்டால் அடுத்த அடுத்த தேர்தலுக்கு அதிகம் வெற்றி பெற்று விடலாம் என்று செய்கிறார்கள். அடுத்தடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே விவகாரத்தில் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

மேகதாது விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் இருக்கிறது; எளிதாக கட்ட முடியாது. ஆனால் தற்பொழுது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மத்தியில் இருக்கும் அரசு தமிழகத்திற்கு ஆதரவளிக்காது. கர்நாடகவிற்குதான் ஆதரவளிக்கும்.

கர்நாடகா, கொடுக்கும் இடத்தில் இருக்கிறது, தமிழகம் வாங்கும் இடத்தில் இருக்கிறது..  என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், அதனால் தடுக்க முடியாது.

20 சதவீதம்தான் கிடைக்கும்

ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் 20 சதவீதம்தான் தண்ணீர் கிடைக்கும்; கர்நாடகவிற்கு 80 சதவீதம் தண்ணீர் கிடைக்கும். ராசி மணல் பகுதியில் அணை கட்டினால் பாதிப்பு ஏற்படும். இரண்டு அரசுமே அணை கட்டக்கூடாது.

காவிரியில் 20 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். கடந்த திமுக ஆட்சியில் கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தியதே தவிர, நீர் ஆதாரத்திற்கான நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை.

கடந்த 60 ஆண்டுகளில் ஆண்ட கட்சிகள், நீர் பாசனத்திற்கு எந்த முன்னுரிமையும் கொடுக்கவில்லை; மற்ற மாநிலங்கள் நீர் ஆதாரத்திற்கு அதிக முக்கியத்துவம்  கொடுத்து வருகிறது. காமராஜர் காலத்தில் நீர் ஆதாரத்துக்காக நடவடிக்கைகளை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தினார். அதன் பிறகு யாரும் நீர் ஆதாரத்திற்காக எதுவும் செய்யவில்லை.

நட்பு பாதிக்கக்கூடாது

தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். அறிவுரைகள் கொடுங்கள், அதை   ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிறோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் கூறியுள்ளார்; அதனால் திட்டங்கள் குறித்து சொல்ல உள்ளோம்.

இதனால் தமிழக- கர்நாடகா மக்களுக்கு நட்பு பாதிக்கக்கூடாது. கர்நாடகத்தில் தமிழக மக்கள் நல்ல நிலையில் உள்ளார்கள். இதனைப் பக்குவமாக கையாள வேண்டும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget