அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கரூர் மாயனூர் கதவணைக்கு 6,360 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 6,143 கன அடியாக இருந்தது. தென்கரை பாசன வாய்க்காலில் நூறு கன அடியும் கீழ் கட்டளை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
அமராவதி அணை:
கேரள மாநிலம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 458 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து 486 கனஅடியாக அதிகரித்துள்ளது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 250 கன அடி தண்ணீர், திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 59.78 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை:
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 6,360 கன அடி தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து வினாடிக்கு 6,143 கன அடியாக இருந்தது. தென்கரை பாசன வாய்க்காலில் நூறு கன அடியும் கீழ் கட்டளை வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
ஆத்து பாளையம் அணை :
கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வழி ஆத்துபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.52 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.