ரூ.1000 தந்தால் அம்மன் நேரடி தரிசனம்!மேல்மலையனூரில் இடைத்தரகர்கள் அட்டகாசம்..நடவடிக்கை பாயுமா?
மேல்மலையனூரில் அம்மனை தரிசிக்க பக்தர்களிடம் இடைத்தரகர்கள் வசூல் வேட்டை செய்யும் வீடியோ வைரல்

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் அம்மன் தரிசனத்திற்காக பக்தர்களிடம் இடைத்தரகர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேல்மலையனூர் கோவிலில் இடைத்தரகர்கள் வசூல் வேட்டை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுபாட்டின்கீழ் செயல்படும் இக்கோயிலில் மாதம்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்ற சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்திற்கு வருகை தந்த பக்தர்களிடம் பேரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மூலஸ்தானத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு ரூபாய் 2000 கேட்டு பேரம்பேசி அங்கிருந்த இடைத்தார்கர் ஒருவர் 1700 வாங்கிக் கொண்டு மூலஸ்தனத்திற்கு கொண்டு சென்று விடுவதாக கூறி பக்தர்களிடம் பணம் வசூலில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் தொடர்ச்சியாக இது போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பணம் பெற்றுக் கொண்டு அங்காளம்மனை நேரடியாக தரிசனம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்துவரும் நிலையில் இது போன்று பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு அனுமதிப்பது எத்தகைய வகையில் நியாயம் எனவும் இதுகுறித்து புகார் அளித்தால் அறநிலையத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை, எனவே இது பன்று கீழ்த்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





















