AIADMK | திமுகவுக்கு ஆதரவாக செயல்பாடு.. அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 பேர்!
அதிமுகவைச் சேர்ந்த 10 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 10 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓபன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ''கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல்; திமுக-வினருக்கு ஆதரவாக செயல்படுதல் மற்றும் கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுதல் உள்ளிட்ட குறிப்பிடப்பட்ட நபர்கள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
Local body election |கோவை திமுகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல் - சமாளிப்பாரா செந்தில்பாலாஜி?
நீக்கம் செய்யப்பட்டவர்கள்:
1.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, திரு.K. மாதவராமானுஜம்,
(தச்சநல்லூர் வடக்கு பகுதிக் கழகச் செயலாளர்)
2. திரு. மணிமாளிகை M. கணேசன், (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர்)
3.திரு. செ. பாலசுப்பிரமணியன்,
(10-ஆவது வட்டக் கழகச் செயலாளர், தச்சநல்லூர் தெற்கு பகுதி)
4.திருமதி B. விஜி, (க/பெ. பாலசுப்பிரமணியன்)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த,
5.N. கரிகாலன் (எ) ரமேஷ், (மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர் )
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த,
6. M. அங்குசாமி, (ராமநாதபுரம் நகரக் கழகச் செயலாளர்)
7. TR. சீனிவாசன்,
(ராமநாதபுரம் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்) திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த,
8. M. கண்ணாயிரம், (கழகப் பொதுக்குழு உறுப்பினர், உடுமலைப்பேட்டை தொகுதி)
9. M. கெபீர், (ரூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக் கழக அவைத் தலைவர்)
10. K. குமரேசன், (உடுமலைப்பேட்டை நகர 10-ஆவது வார்டு கழகச் செயலாளர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்