OPS Press Meet: அரவணைத்து செல்வதே தலைமைக்கு தேவையான பண்பு: ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றம் வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்று ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் எதுவும் தனித்தனியாக நடத்தப்படக்கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவை கூட்ட ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் தானாகவே ரத்தாகிவிட்டது.
இதனால், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள் தானாகவே ரத்தாகிவிட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது அனைத்தும் தானாகவே செல்லாத நிலைக்கு வந்துவிட்டது.
Tamil Nadu|O Panneerselvam pays floral tribute to former CM J Jayalalithaa at Jaya Memorial in Chennai
— ANI (@ANI) August 17, 2022
Madras HC passed an order in his favour on his plea questioning legality of convening AIADMK Gen Council meet,ordered status quo ante June 23 & ordered a fresh gen council meet pic.twitter.com/wwZfJrKHWP
இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி ஆர் , ஜெயலலிதா , ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்தினேன் இந்த வெற்றி ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி கட்சியின் நிறுவனரான எம் ஜி ஆர் அவர்கள இந்த இயக்கத்தை தொண்டர் இயக்கமாக மாற்றினார் அவருக்கு பின் ஜெயலலிதா அவர்கள் இந்த தொண்டர்கள் இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றினார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்த இந்த வெற்றியை ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். கடந்த சில மாதங்கள் அசாதாரணமான சூழலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் டெல்லி உச்ச நீதிமன்ற அறிவுறுதலோடு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. தொண்டர்கள் இயக்கத்தை யார் பிளவு படுத்த நினைத்தாலும் நடக்காது. கடந்த அர் ஜூன் மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் யார் யார் என்னென்ன பதவியில் இருந்தார்களோ அவர்கள் அதே பதவியில் தொடர்வதாக தெரிவித்தார்.
பொதுக்குழுவில் தன்னை பல பேர் அவமதித்தாலும் ஒரு தலைமை பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் இத்தகைய அவமானங்களை எல்லாம் கருத்தில் கொள்ள கூடாது என அண்ணா தெரிவித்துள்ளதாக கூறினார். பொதுக்குழு நடத்த வேண்டுமா என்பது குறித்து அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
மேல்முறையீடு செய்ய ஈபிஎஸ் திட்டம் :
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்