மேலும் அறிய

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடில் ஈடுபட்டதாக அப்போதைய அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். 

இந்த வழக்கை தலைமை நீதிபதிகள் சஞ்சிப் பேனர்ஜி மற்றும் செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 
இந்த வழக்கு தொடர்பாக கடந்த முறை ஆஜரான தமிழக அரசு,  “கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. அதில் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதல்வர், அமைச்சரவை மற்றும் தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகையால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்று கூறியது. வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை போலீஸ் சூப்பிரண்டு ஆர். பொன்னி கடந்த 2019, டிசம்பர் 18 ஆம் தேதி  சமர்பித்திருந்தார்.

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆரம்ப கட்ட விசாரணை முடிந்தாலும், அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்பட வில்லை என்பதால் நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். 

அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், “இந்த வழக்கில் அதிகமான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. அத்துடன் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. ஆகையால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க  வேண்டும்” என்றார். தொடர்ந்து வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி  “அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்தக்குற்றசாட்டும் இல்லை என்று அறிக்கை சமர்பிக்கப்பட்டு, அந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதாடினார். இதனைக்கேட்ட நீதிபதிகள் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும் நீதிமன்றம் ஏற்கவில்லை எனக் கூறி வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.   

தலைப்பு செய்திகள்

சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
விவசாயிகள், பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! கூட்டுறவு கடன் திட்டங்களின் புதிய அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget