மேலும் அறிய

AIADMK Conference: பிரம்மாண்டமாக நடைபெற்ற அதிமுக மாநாடு: நிறைவேற்றப்பட்ட 32 தீர்மானங்கள் என்னென்ன?

AIADMK Conference: தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மதுரை மாநாடு

அதிமுகவின் வீர வரலாறு பொன்விழா எழுச்சி மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டு திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் மாநாட்டு பந்தலை, ரிப்பன் வேட்டி திறந்து வைத்ததோடு நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அதிமுகவின் 51 ஆண்டு வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஆகியோரின் அரசியல் வரலாறு, அதிமுக ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

புரட்சித் தமிழர் பட்டம்

அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழி என்ற பெயரில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில், அக்கட்டியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் வழஙக்ப்பட்டது. 

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சர்வ சமய பெரியோர்கள், எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சேவையைப் பாராட்டி புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை வழங்கினர். 

32 தீர்மானங்கள்

  1.  செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், அதிமுக தொண்டாகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.
  2.  மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடி வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டுகளும். 
  3.  எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடி திகழ்கிறார். அம்மா அவர்களின் அரசியல் வாரிசு என நல்லாட்சியைத் தந்தவர். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்த பொதுச் செயலாளர்.
  4. அதிமுவிற்கு இரண்டு கோடிகளுக்கு மேல் உறுப்பினர் சேர்க்கைக்காக அதிமுகவின் மாவட்ட / மாநில / பிற மாநில நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டும் நன்றியும். 
  5. இந்திய திருநாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.
  6.  திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
  7. தமிழ்நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்விக்காக மத்திய அரசை வலியுறுத்தல்.
  8. தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
  9. புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்
  10. மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம். 
  11. மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழக அரசுக்கு கண்டனம்.
  12. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம். இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய தமிழக அரசுக்கு கண்டனம்.
  13.  விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தமிழக அரசுக்கு கண்டனம்.
  14. மேகதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழக அரசை கண்டித்து.
  15. கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்து.
  16. ’நினைத்ததை முடிப்பவன் நான்’ என புரட்சித் தலைவர் பாடினார். அதன்படி நினைத்ததை முடித்தவர் எடப்பாடி பழனிசாமி.
  17. தமிழகத்தில்தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  18.  நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  19. உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  20. காவிரி குண்டாறு நதிகளின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து தீர்மானம்.
  21.  கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
  22. பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  23. கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  24. மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் அங்கு அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தல்
  25. கழக நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்
  26.  அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  27. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  28.  ஜெயலலிதாவிற்கு சட்ட சபையில் இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் மு.க. ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.
  29. கட்சியிலிருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு.
  30.  மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  31.  2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை.
  32.  அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தமிழக முதல்வராக்க சபதம் ஏற்போம்

இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்ப்பட்டன.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget