மேலும் அறிய

CUET Entrance Test : பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்துக.. திமுக அரசுக்கு ஒபிஎஸ் வலியுறுத்தல்

மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவுள்ள நுழைவுத்தேர்வை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவுள்ள நுழைவுத்தேர்வை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 இலட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக, 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு, அதாவது Central University Entrance Test (CUET) நடத்தப்படும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு தி.மு.க. அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வு தமிழ் மொழி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

CUET Entrance Test : பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்துக.. திமுக அரசுக்கு ஒபிஎஸ் வலியுறுத்தல்

இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும் என்பதோடு மட்டுமல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்த நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதனை முளையிலேயே’ - கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு. நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். - அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது, இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget