மேலும் அறிய

புதுச்சேரியில் அதிரடி நடவடிக்கை! குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்.. அமைச்சர் அதிரடி

புதிதாக பணியிடங்களை உருவாக்கி நிரப்ப மத்திய அரசுக்கு கோப்புகள் தயார் செய்து அனுப்பட்டுள்ளது - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதிதாக பணியிடங்களை உருவாக்கி நிரப்ப மத்திய அரசுக்கு கோப்புகள் தயார் செய்து அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள் பலர் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், கடந்த கூட்டத்தில் 60 நாட்களில் 19 சதவீத குற்றங்களுக்கு தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்றைக்கு 98 சதவீத குற்றங்களுக்கான குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 தினங்களில் தொடர்ந்து கொலைகள் நடந்துள்ளது. இது போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் எல்லோர் மீதும் போட்டுவிட முடியாது

புதுச்சேரியில் நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டம் எல்லோர் மீதும் போட்டுவிட முடியாது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது தான் குண்டர் சட்டம் போட முடியும். இதுவரை 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

தற்போது புதிய மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில், யார் எல்லாம் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு அவர்களை நேரடியாக பதிவு செய்து, அவர்களின் இருப்பிடத்தை, தகவல் மையத்திற்கு அளிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகிறோம்.

காவல் துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்பப்படும் 

தீபாவளி பண்டிகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டது. காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறோம். ஒரு வார காலத்திற்குள் சீனியாரிட்டி அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பதவி உயர்வு வழங்கப்படும். புதிதாக பணியிடங்களை உருவாக்கி நிரப்ப மத்திய அரசுக்கு கோப்புகள் தயார் செய்து அனுப்பியுள்ளோம். 882 ஐ.ஆர்.பி.என்., போலீசார் உள்ளனர். இரண்டாவது ஐ.ஆர்.பி.என்., யூனிட் தேவை என மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget