மேலும் அறிய

TN Weather Update: வெயிலின் கொடூரம்! அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..

வட  தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 29 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 30 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே 2 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

26.04.2024 முதல் 30.04.2024 வரை:

தமிழக உள்  மாவட்டங்களில்  அடுத்த ஐந்து  தினங்களில்  அதிகபட்ச   வெப்பநிலை 2°  செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்

26.04.2024 முதல் 30.04.2024 வரை:

காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 

26.04.2024 முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து  தினங்களில் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.   கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை  ஈரோட்டில் 42.2° செல்சியஸ்,  திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், சேலத்தில் 41.7° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், தர்மபுரியில்  40.7° செல்சியஸ்,  நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், திருச்சியில் 40.2° செல்சியஸ், திருத்தணி மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ்  பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கர்நாடக பாலியல் புகார்: எம்.எல்.ஏ ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு
கர்நாடக பாலியல் புகார்: எம்.எல்.ஏ ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai Slams Annamalai : ”கச்சதீவு Files அ-மலை-க்கு எப்படி கிடைத்தது?” - செல்வப்பெருந்தகைVanathi Srinivasan  : ”சவுக்கு சங்கர் மீது தாக்குதலா?” ஸ்டாலினை சாடும் வானதி!Selvaperunthagai Slams Savukku Shankar : “சவுக்கு சங்கர் பெண்களை தப்பா பேசலாமா?”சீறிய செல்வப்பெருந்தகைSavukku Shankar  : ஜெயிலுக்குள் டார்ச்சர்..?சவுக்கு சங்கருக்கு என்ன ஆச்சு?ஆதாரம் கொடுத்த வழக்கறிஞர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக பாலியல் புகார்: எம்.எல்.ஏ ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு
கர்நாடக பாலியல் புகார்: எம்.எல்.ஏ ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
TN Weather: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
Akshaya Tritiya 2024 Date: அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
Embed widget