மேலும் அறிய

Metro Rail: மெட்ரோ ரயில் நோக்கி மக்கள்.. அதிகரிக்கும் பயணிகள்.. கடந்த மாதம் எத்தனை லட்சம் பேர்?

மெட்ரோ ரயில் தொடங்கியதில் இருந்து கடந்த மாதம் அதிகபட்சமாக 86.82 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் சேவை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் வகையில், 2 ஆம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 86.82 லட்சம் மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 67 ஆயிரத்து 449 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும் இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 04.03.2024 அன்று 3,34,710 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, மார்ச் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு பயன்படுத்தி 34,62,083 பயணிகள் (Online QR 2,05,653; Static Q 2,47,977; Paper QR 20,05,931; Paytm 4,00,963; Whatsapp - 3,81,369; PhonePe – 2,12,237; ONDC 7,953), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 37,64,044 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 54,849 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,512 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13,95,969 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Jana Nayagan Censor: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
அதிமுக, பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகள் எத்தனை.? எடப்பாடி போட்ட லிஸ்ட்- ஓகே சொன்ன அமித்ஷா
அதிமுக, பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகள் எத்தனை.? எடப்பாடி போட்ட லிஸ்ட்- ஓகே சொன்ன அமித்ஷா
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Jana Nayagan Censor: போடு வெடிய; ஜனநாயகன் படத்துக்கு யுஏ சான்று- நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எப்போது வெளியீடு?
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
அதிமுக, பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகள் எத்தனை.? எடப்பாடி போட்ட லிஸ்ட்- ஓகே சொன்ன அமித்ஷா
அதிமுக, பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகள் எத்தனை.? எடப்பாடி போட்ட லிஸ்ட்- ஓகே சொன்ன அமித்ஷா
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 10-ம் தேதி எந்தெந்த இடங்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல ஜனவரி 10-ம் தேதி எந்தெந்த இடங்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Gold, Silver Rate Jan.9th: அட போங்கப்பா.! விலை உயர்ந்த தங்கம், குறைந்த வெள்ளி; இன்றைய விலை நிலவரம் என்ன.?
அட போங்கப்பா.! விலை உயர்ந்த தங்கம், குறைந்த வெள்ளி; இன்றைய விலை நிலவரம் என்ன.?
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Embed widget